வேளச்சேரி
| வேளச்சேரி | |
| — neighbourhood — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஈ. சுந்தரவள்ளி [3] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | www.chennai.tn.nic.in |
வேளச்சேரி (Velachery) சென்னையில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் ஒரு குடியிருப்பு பகுதி ஆகும்.
பொருளடக்கம் |
பெயர்க்காரணம் [தொகு]
வேத சிரேணி என்பதே வேளச்சேரி என மருவியதாகக் கூறுவர். வேள் என்றால் தலைவர் என்று பொருள். தலைவரை(பெருமாளை) பார்க்க மக்கள் கூடுமிடம் என்பதால் வேளச்சேரி என அழைக்கப்படலாயிற்று.
போக்குவரத்து [தொகு]
வேளச்சேரி விசயநகரப் பேருந்து நிலையத்திலிருத்து பாரிமுனை, திருப்பெரும்புதூர், செங்கற்பட்டு, தியாகராயர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுற்றுப்புறம் [தொகு]
வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. டீசியெசு, சதர்லேண்டு, காக்னிசன்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. புதிதாக பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி என்ற பேரங்காடி திறக்கப்பட்டுள்ளது.