ஜார்ஜ் டவுன், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் டவுன், சென்னை
ஜார்ஜ் டவுன்
ஜார்ஜ் டவுன், சென்னை is located in Chennai
{{{alt}}}
ஜார்ஜ் டவுன், சென்னை
அமைவு: 13.0939°′″N 80.2839°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
மெட்ரோ சென்னை
வார்டு முத்தியால்பேட்டை
அஞ்சலக சுட்டு எண் 600001
மக்களவைத் தொகுதி மத்திய சென்னை
நகர்ப்புறத் திட்டக் குழு சிஎம்டிஏ
நகராட்சி சென்னை மாநகராட்சி
இணையத்தளம்: www.chennai.tn.nic.in

ஜார்ஜ் டவுன் (George Town) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.[1]

வரைபடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையும் ஜார்ஜ் டவுனும்

நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டு விரைவாக வளரத் தொடங்கியது. முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த சென்னக் கேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிசுவரசுவாமி கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் தங்கச்சாலைக்கு இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே பட்டணம் கோவில் என புகழ்பெற்றிருந்தன.

சான்றுகோள்கள்[தொகு]

  1. Muthiah, S. (1 January 2012). "Madras miscellany: A forgotten name-change". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/life-and-style/metroplus/article2763617.ece. பார்த்த நாள்: 28-Apr-2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

இடவமைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_டவுன்,_சென்னை&oldid=1370493" இருந்து மீள்விக்கப்பட்டது