சென்னை மோனோரெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை மோனோரெயில்
Chennai Monorail
தகவல்
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
போக்குவரத்து
வகை
ஒற்றைத் தண்டூர்தி
மொத்தப் பாதைகள்3 (முதல் கட்டம்)
தலைமையகம்சென்னை
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
2014 (மதிப்பீடு.)
தொடர்வண்டி நீளம்4 பெட்டிகள்
Headway3 நிமிடங்கள்
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்57 கிமீ (முதல் கட்டம்)
மின்னாற்றலில்750 வோல்ட் நேர்.மி
சராசரி வேகம்65 km/h (40 mph)
உச்ச வேகம்80 km/h (50 mph)

சென்னை மோனோரெயில் (Chennai Monorail) அல்லது சென்னை ஒற்றைத் தண்டூர்தி தமிழ்நாட்டின் சென்னை நகரின் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட உள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும். இது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நெடுங்கால நகரக போக்குவரத்து திட்டத்தின் இரண்டாம் பெருந்திட்டத்தில் இது முன்மொழியப்பட்டுள்ளது.

நான்கு வழித்தடங்களில் ஒற்றைத் தண்டூர்தி விட அரசு முடிவெடுத்துள்ளது[1].

  1. வண்டலூர் - வேளச்சேரி (23 கிமீ)
  2. பூவிருந்தவல்லி - கத்திப்பாரா சந்திப்பு (16 கிமீ)
  3. பூவிருந்தவல்லி - வடபழனி (18 கிமீ)
  4. வண்டலூர் - புழல் (54 கிமீ)

முதல் 3 வழித்தடங்களில் 8,500 கோடி ரூபாய் செலவில் பணிகளை தொடங்கிவிட்டு, நான்காவது வழித்தடத்தை பின்னர் தொடங்குவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/news/cities/chennai/article3529315.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மோனோரெயில்&oldid=2003659" இலிருந்து மீள்விக்கப்பட்டது