சென்னை புறநகர் பேருந்து நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் இந்தியாவின் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம். 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.[1]. ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.[1]
இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[2] கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவால் நிறுவப்பட்டது.[3] ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது இப்பேருந்து நிலையம்.[2]