சென்னை உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சென்னை உயர் நீதிமன்றம் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய இடமாக அதன் சிறப்பை உயர்த்துவதில் சென்னை உயர் நீதிமன்றம் (உயர் அறமன்றம்) விளங்குகின்றது. உலகில் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புடன் விளங்குகின்றது..


Seal of Tamil Nadu.jpg

இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

 பார்  பேச்சு  தொகு 

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

சென்னை உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்ற வாளாகத்தில் உள்ள மனுநீதி சோழனின் சிலை.

சென்னை உயர்நீதிமன்றம் சூன் 26, 1862, ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக (மற்றவை மும்பை, கொல்கத்தா), சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின்[1] அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.

1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மாதராசு உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே வழங்கப்படுகின்றது.

இதனோடு சேர்ந்த மூன்று உயர்நீதி மன்றங்களில் மற்ற இரண்டான மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்களாக, 1861 உயர்நீதிமன்ற சட்ட வரைவிற்கு முன்பு வரை செயல்பட்டுக்கொண்டிருந்தன.

1870கு முன் இதன் நீதிபரிபாலணையில் பிரித்தானியர் மட்டுமே வழக்கறிஞராக பங்குபெற முடியும் என்ற நிலை, பிரித்தானிய முடியாட்சியினரிடமிருந்து வழங்கப்பட்ட ஆணையினால் இந்திய வழக்குரைஞர்களும் பங்கு பெற முடியும் என்ற நிலையை அடைந்தது.

[தொகு] கட்டுமான அமைப்பு

இதன் கட்டுமானம் இந்தோ-சார்சியனிக் முறையில் 1892 ல் என்றி இர்வின்[2] வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது. இதன் கட்டுமானம் -செப்டம்பர் 22, 1914 ல் முதல்உலகப்போரின் துவக்கத்தின்போது செர்மனின் எசு எம் எசு எம்டன் போர்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது.

[தொகு] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[3] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.

[தொகு] அரசுத் தலைமை வழக்குரைஞர்

அரசுத் தலைமை வழக்குரைஞர் [4] (அட்வகேட் ஜென்ரல்)(அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப் பெற்ற இவரே தமிழக அரசு சார்பில் வாதாடுபவர் மற்றும் அரசுக்கு ஆலோசணைகள் வழங்குபவரும் இவரே. உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்குரியத் தகுதிகளுடன் இருப்பவர். தமிழகத்தின் தற்பொழுதய தலைமை வழக்குரைஞர் திரு ஜி.மாசிலாமணி[5] இவருக்கு துணை புரிகின்ற வகையில் இரு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள் செயல்படுகின்றனர்.

[தொகு] மதுரைக் கிளை

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இந்தியாவின் தமிழக மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநில உயர் நீதிமன்றக்கிளையாகும்.

[தொகு] துவக்கம்

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அமைக்கப்பட்டுள்ள உள்ள நீதி தேவதை

இக்கிளை உயர்நீதிமன்றம்ஜூலை 24 2004 [6] முதல் அப்பொழுதய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ஆர் சி லகோத்தியால்,[6] சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு பி. சுபாஷன் ரெட்டியின் தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான நீதியரசர்கள் திரு சிவராஜ் வி பாட்டீல், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதியரசர் முனைவர் திரு ஏ.ஆர். லட்சுமணன், மாண்புமிகு மத்திய சட்டத்துறை அமைச்சர் எச். ஆர். பரத்வாஜ் ,[6] மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. டி. ஜெயக்குமார் ,[6] முன்னிலையில் துவக்கிவைக்கப்பெற்று இயங்கிவருகின்றது.

[தொகு] அமர்வு

நீதியரசர் திரு.ஹேமன்த் லட்சுமண கோக்கலே[7] தலைமையின் கீழ் 54 நீதிபதிகள் (அற நடுவர்கள்) பணிபுரிகின்றனர். இவர்கள் உரிமை இயல் (சமூக நலன்- சிவில்) மற்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரிக்கின்றர். இதன் கிளையான மதுரை அமர்வு 2004 முதல் செயல்படுகின்றது என்பது குறிப்படத்தக்கது.

  • உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[3]
    • மாவட்ட நீதிபதி
    • சார்பு நீதிபதி
    • மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
  • குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[3]
    • செசன்சு நீதிபதி
    • தலைமை நீதிமுறைமை நடுவர்
    • உதவி செசன்சு நீதிபதி
    • நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

[தொகு] சார்நிலை நீதிமன்றங்கள்

இந்தியாவின் மாநிலமான தமிழக மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அ சார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.

'
'

[தொகு] முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்

.'
'

[தொகு] சென்னை சட்டக்குறிப்பு

இந்தியாவின் சட்ட நிகழ்வுகளை, மற்றும் தகவல்களை வெளியிடும் சென்னை சட்டக்குறிப்பு [9] உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்டக்குறிப்பு ஆகும்.துவங்கிய ஆண்டு 1891.

சென்னை சட்டக்குறிப்பு துவங்கியதின் வரலாற்றை உற்று நோக்கும் பொழுது பல அறிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன, முறைப்படி இயங்காத சங்கமாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் 11 மணியளவில் வக்கீல் பார் எனப்படும் சங்கத்தில் மயிலாப்பூரில் மூத்த வழக்குரைஞரான ஸ்ரீ எஸ் சுப்ரமணிய ஐயர் தலைமையில் இதர மூத்த உறுப்பனர்களுடன் கூடும் அளவில் 1888 ல் துவங்கப்பட்டது. அதில் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை சட்டக்குறிப்பு சஞ்சீகை என்ற ஒன்றை சட்ட காலாண்டு மதிப்பாய்வாகத் துவங்க இங்கிலாந்து, சர் பிரட்ரிக் பொல்லாக் கினால் 1885 ல் துவங்கப்பட்டது, 1887 ல் இது ஆர்வர்டு சட்ட பள்ளி அமைப்பால் விரிவடைந்தது.

ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை இது பலருக்கும் பயன்தரும் வகையில் பலரும் சட்டக்குறிப்புகளை அறிய, அகத்தூண்டுதலை உருவாக்க, குறிப்பாக மாணவர்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றது.

இந்த நீதிமன்றத்தில் தான் பழைய கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது சரியாக பராமரிக்கபடாததால் அதன் பெருமையை யாரும் அறியமுடிவதில்லை

[தொகு] சமீபத்திய நிகழ்வுகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பெப்ரவரி 19,2009 [10] அன்று நீதிமன்றத்திற்குள்ளே வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் ஒருவரையொருவர்த் தாக்கிக் கொண்டனர். உயர் நீநிமன்றத்தில் உள்ள காவல் நிலையமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இவ்வன்முறையால் நீதிபதிகள் தாக்கப்பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. சென்னை உயர் நீதிமன்றம்-அறிமுகம்
  2. நினைவலைகள் நியூ இன்ட் பிரஸ் கட்டுரை
  3. 3.0 3.1 3.2 சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  4. மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்-உச்ச நீதிமன்ற இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
  5. தமிழக அரசு இணையம்- அரசுத் தலைமை வழக்கரைஞர் தொலைபேசி குறிப்பேடு பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
  6. 6.0 6.1 6.2 6.3 சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு-உயர் நீதிமன்ற இணையம் பார்த்து பரணிட்ப்பட்ட நாள் 07-04-2009
  7. 7.0 7.1 சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் அரசு இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  8. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்
  9. சென்னை சட்டக்குறிப்பு இணையம்
  10. "தினமலர்- உயர்நீதிமன்ற மோதல்". தினமலர் (20/02/2009). 20/02/2009. http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=3050&ncat=&archive=1&showfrom=2/20/2009. Retrieved 2009-03-04. 
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்