தமிழக முதல்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Seal of Tamil Nadu.jpg

இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

 பார்  பேச்சு  தொகு 

தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர்- இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி தமிழத்தின் ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் தமிழகத்தின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.

இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை இருப்பினும் சிறப்பு துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.

இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய எற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.

தமிழகத்தின் தற்பொழுதய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஆவார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_முதல்வர்&oldid=767097" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி