குறிக்கோளுரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறிக்கோளுரை (இத்தாலியம் :motto) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும். இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை வாய்மையே வெல்லும் என்பதாகும்.
[தொகு] இலக்கியம்
இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு. காட்டாக, இராபர்ட் லூயி ஸடீவன்சன் எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும்.