இந்திய பொதுத் தேர்தல்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய பொதுத் தேர்தல்களின் பட்டியல் (List of Indian general elections) என்பது இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களின் பட்டியல் ஆகும். இதில் மக்களவை (மக்கள் சபை) அல்லது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை உறுப்பினர்கள், இந்திய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் தகுதியான வேட்பாளர்களிலிருந்து இந்தியாவின் அனைத்து வயது வந்த குடிமக்களால் வாக்களிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியாவின் 18 வயது முடிவடைந்த ஒவ்வொரு குடிமகனும் தான் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும். மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என்று அழைக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் அல்லது பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவரால் சபை கலைக்கப்படும் வரை பதவியில் இருப்பார்கள். புதிய சட்டங்களை உருவாக்குதல், இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் தற்போதைய சட்டங்களை நீக்குதல் அல்லது மேம்படுத்துதல் தொடர்பான விஷயங்களில், புது தில்லியில் உள்ள சன்சத் பவனில் உள்ள மக்களவையில் கூட்டம் கூடுகிறது. மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.[1]

மக்களவைக்கு முதல் தேர்தல் 1951-52ல் நடந்தது.[2][3][4]

இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல்களின் பட்டியல்[தொகு]

தேர்தல் ஆண்டு மக்களவை மொத்த இடங்கள் வாக்குபதிவு வீதம் தனிப்பெரும்பான்மை பெற்றக் கட்சி அரசமைத்த இடங்கள் பெரும்பான்மை அவையில் விகிதாச்சாரம் (%) தலைவர்
1951–52 முதலாவது 489 45.70% இந்திய தேசிய காங்கிரசு 364 119 74.48 ஜவகர்லால் நேரு
1957 இரண்டாவது 494 55.42% இந்திய தேசிய காங்கிரசு 371 123 75.10 ஜவகர்லால் நேரு
1962 மூன்றாவது 55.42% இந்திய தேசிய காங்கிரசு 361 113 73.08 ஜவகர்லால் நேரு
1967 நான்காவது 520 61.04% இந்திய தேசிய காங்கிரசு 283 22 54.42 இந்திரா காந்தி
1971 ஐந்தாவது 518 55.27% இந்திய தேசிய காங்கிரசு 352 92 67.95 இந்திரா காந்தி
1977 ஆறாவது 542 60.49% ஜனதா கட்சி 295 23 54.98 Morarji Desai
1980 ஏழாவது 529 56.92% இந்திய தேசிய காங்கிரசு 353 88 64.76 இந்திரா காந்தி
1984 எட்டாவது 541 64.01% இந்திய தேசிய காங்கிரசு 414 143 76.52 இராஜீவ் காந்தி
1989 ஒன்பதாவது 529 61.95% இந்திய தேசிய காங்கிரசு 197 –68 36.86 வி. பி. சிங்
1991 பத்தாவது 521 55.88% இந்திய தேசிய காங்கிரசு 244 –17 46.83 பி. வி. நரசிம்ம ராவ்
1996 பதினொராவது 543 57.94% பாரதிய ஜனதா கட்சி 161 –111 29.65 அடல் பிகாரி வாச்பாய்
1998 பன்னிரண்டாவது 543 61.97% பாரதிய ஜனதா கட்சி 182 –90 33.39 அடல் பிகாரி வாச்பாய்
1999 பதின்மூன்றாவது 59.99% பாரதிய ஜனதா கட்சி 182 –90 33.39 அடல் பிகாரி வாச்பாய்
2004 பதினான்காவது 543 58.07% இந்திய தேசிய காங்கிரசு 145 –127 26.70 மன்மோகன் சிங்
2009 பதினைந்தாவது 543 58.21% இந்திய தேசிய காங்கிரசு 206 –66 37.80 மன்மோகன் சிங்
2014 பதினாறாவது 66.44% பாரதிய ஜனதா கட்சி 282 10 51.74 நரேந்திர மோதி
2019 17வது 543 67.40% பாரதிய ஜனதா கட்சி 303 31 55.80 நரேந்திர மோதி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020.
  2. "Lok Sabha Results 1951-52". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  3. "Statistical Report on Lok Sabha Elections 1951-52" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.
  4. "Lok Sabha Elections Stats Summary 1951-52" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 23 November 2014.