கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசின் பத்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பத்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. காங்கிரசுத் தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையில் இந்திய தேசிய காங்கிரசு வென்று பி. வி. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
பின்புலம் [தொகு]
முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி அரசு, ஒற்றுமையின்மையால் இரு ஆண்டுகளில் கவிழ்ந்தது. அதன் முக்கிய அங்கமான ஜனதா தளம் இரண்டாகப் பிளவுற்று சந்திரசேகர் தலைமையில் சவாஜ்வாடி ஜனதாக் கட்சி உருவானது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுடுப்பில் வி. பி. சிங் தோற்று சந்திரசேகர் பிரதமரானார். சந்திரசேகர் அரசுக்கு ராஜீவ் காந்தியின் காங்கிரசு கட்சி வெளியிலிருந்து ஆதரவளித்தது. ஆனால் விரைவில் ஆதரவை விலக்கிக் கொண்டதால், சந்திர சேகர் அரசும் கவிழ்ந்து, புதிதாக தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் நான்கு முனைப்போட்டி காணப்பட்டது - காங்கிரசு, பாரதீய ஜனதா கட்சி, ஜனதா தளம், சமாஜ்வாடி ஜனதாக் கட்சி ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் களத்தில் இருந்தன.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி. வி. நரசிம்ம ராவ் காங்கிரசு தலைவரானார். ராஜீவ் படுகொலையினால் எழுந்த அனுதாப அலையால் காங்கிரசு நிறைய இடங்களில் வென்று முதலிடத்தில் வந்தது. தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையென்றாலும் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானார்.
முடிவுகள் [தொகு]
மொத்தம் 55.71 % வாக்குகள் பதிவாகின
இவற்றையும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]