கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசின் எட்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு எட்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் படுகொலையால் கிட்டிய அனுதாப அலையால். இந்திய தேசிய காங்கிரசு எளிதில் வென்று ராஜீவ் காந்தி இரண்டாம் முறையாக பிரதமரானார்.
பின்புலம் [தொகு]
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆனால் இத்தேர்தல் 514 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. சில மாதங்கள் கழித்து 1985ம் ஆண்டு நடைபெற்றது. முந்தைய தேர்தலில் வென்று பிரதமரான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் அவரது இளைய மகன் ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தலைவாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். பிரதமரான சில நாட்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தார். இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட நாடளாவிய அனுதாப அலையால் காங்கிரசு பெருவெற்றி கண்டது. இத்தேர்தலில் வலுவான எதிர்க்கட்சிகளோ கூட்டணிகளோ எதுவும் இல்லை. காங்கிரசுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வந்தது. சில மாதங்கள் கழித்து அசாமிலும் பஞ்சாபிலும் நடைபெற்ற தேர்தல்களிலும் காங்கிரசு பெருவாரியான இடங்களை வென்றது.
முடிவுகள் [தொகு]
மொத்தம் 63.56 % வாக்குகள் பதிவாகின
- குறிப்பு: அதிமுக காங்கிரசு கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.
இவற்றையும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]