கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசின் ஒன்பதாம் நாடாளுமன்றத் தேர்தல் 1989 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒன்பதாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு தொற்று, எதிர்க்கட்சிக் கூட்டணியான தேசிய முன்னணி வெற்றி பெற்றது. ஜனதா தளத்தின் வி. பி. சிங் பிரதமரானார்
பின்புலம் [தொகு]
இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலில் எளிதாக வென்ற ராஜீவ் காந்தி தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் மக்களின் கடும் அதிருப்தியை சம்பாத்திருந்தார். பஞ்சாப்பில் தொடர்ந்து நடந்துவந்த பிரிவினைப் போராட்டம், அயோத்தி சிக்கல், போபர்ஸ் ஊழல் போன்ற பிரச்சனைகளால் காங்கிரசின் செல்வாக்கு சரிந்திருந்தது. போபர்ஸ் தொடர்பாக ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய வி. பி. சிங் புதிதாக ஜன மோர்ச்சா என்றொரு கட்சியை உருவாக்கினார். பின் அது முன்னாள் ஜனதா கட்சியின் வழித்தோன்றல் கட்சிகளுடன் இணைந்து ஜனதா தளம் என்றொரு வலுவான கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சி காங்கிரசுக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சி, தெலுங்கு தேசம், அகாலி தளம், திமுக, அசாம் கன பரிசத் ஆகிய கட்சிகளை ஓரணியில் திரட்டி தேசிய முன்னணி என்றொரு கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று வி. பி. சிங் இந்தியப் பிரதமரானார்.
முடிவுகள் [தொகு]
மொத்தம் 61.95 % வாக்குகள் பதிவாகின
இவற்றையும் காண்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]