சென்னை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்கட்டுரை சென்னை மாவட்டத்தைப் பற்றியது. சென்னை நகரைப் பற்றி அறிய, சென்னை பக்கத்தைக் காணவும்.
சென்னை மாவட்ட வரைபடம்

சென்னை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நகரம் சார்ந்த மாவட்டம் என்பதால் இம்மாவட்டத்திற்கு தலை நகரம் கிடையாது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் இம்மாவட்டத்தில் தான் உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 43,43,645 மக்கள் வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னை மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தமிழக மாவட்டங்களிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மாவட்டம் இதுவே ஆகும்.

தேவாரத்தலங்கள்[தொகு]

திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பெற்ற சிவாலயங்கள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன.

மருத்துவமனை மற்றும் கல்லூரி[தொகு]

பெயர் முகவரி
பொது மருத்துவமனை சென்னை-600003
ஸ்டான்லி மருத்துவமனை பழைய சிறைச்சாலை சாலை, சென்னை-600001
ராயப்பேட்டை மருத்துவமனை 1, மேற்கு காட் சாலை, சென்னை-600014
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் கல்லூரி சென்னை-600010
சித்தா மருத்துவ கல்லூரி சென்னை-600106

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
ராதாகிருஷ்ணன் நகர் பி. வெற்றிவேல் அதிமுக
பெரம்பூர் ஏ. சுந்தரராஜன் சிபிஎம்
கொளத்தூர் மு. க. ஸ்டாலின் திமுக
வில்லிவாக்கம் ஜே. சி. டி. பிரபாகரன் அதிமுக
திரு.வி.க நகர் வ. நீலகண்டன் அதிமுக
எழும்பூர் கே. நல்லதம்பி தேமுதிக
இராயபுரம் டி. ஜெயக்குமார் அதிமுக
துறைமுகம் பழ. கருப்பையா அதிமுக
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஜெ. அன்பழகன் திமுக
ஆயிரம் விளக்கு பா. வளர்மதி அதிமுக
அண்ணா நகர் கோகுல இந்திரா அதிமுக
விருகம்பாக்கம் கே. தனசேகரன் தேமுதிக
சைதாப்பேட்டை ஜி. செந்தமிழன் அதிமுக
தியாகராய நகர் வி. பி. கலைராஜன் அதிமுக
மயிலாப்பூர் ராஜலட்சுமி அதிமுக
வேளச்சேரி எம். கே. அசோக் அதிமுக


நாடாளுமன்றத் தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்றத்
தொகுதி
அரசியல்
கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட
வேட்பாளர்
வட சென்னை திமுக டி.கே.எஸ். இளங்கோவன்
தென் சென்னை அஇஅதிமுக சி. ராஜேந்திரன்
மத்திய சென்னை திமுக தயாநிதி மாறன்
ஆதாரம்: இந்தியத் தேர்தல்கள் / இந்தியத் தேர்தல் ஆணையம்.[2][3]

ஆதாரங்கள்[தொகு]

  1. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
  2. "தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல்.
  3. "கட்சிகள் நிலவரம்". இந்தியத் தேர்தல் ஆணையம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மாவட்டம்&oldid=1634500" இருந்து மீள்விக்கப்பட்டது