தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996
| ‹ 1991 |
||||
| தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 | ||||
|---|---|---|---|---|
| தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||
| ஜுன் 24, 1996 | ||||
| முதல் கட்சி | இரண்டாம் கட்சி | |||
| தலைவர் | மு. கருணாநிதி | ஜெ. ஜெயலலிதா | ||
| கட்சி | திமுக | அதிமுக | ||
| கூட்டணி | திமுக | அதிமுக | ||
| தலைவரின் தொகுதி | சேப்பாக்கம் | பர்கூர் (தோல்வி) | ||
| வென்ற தொகுதிகள் | 221 | 8 | ||
| மாற்றம் | +219 | -216 | ||
| மொத்த வாக்குகள் | 11,423,380 | 5,831,383 | ||
| விழுக்காடு | 53.49% | 27.08% | ||
| மாற்றம் | +23.44% | -32.50% | ||
|
முந்தைய தமிழ்நாட்டு முதல்வர் |
||||
தமிழ்நாட்டின் பதினோறாவது சட்டமன்றத் தேர்தல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
பொருளடக்கம் |
தொகுதிகள் [தொகு]
1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
அரசியல் நிலவரம் [தொகு]
1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திரா காங்கிரசு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி (வைகோ) கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.[2][3][4][5][6]
அதிமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மக்களிடையே செல்வாக்கிழந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சர்கள் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாகவும் மக்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தின் போது நடைபெற்ற ஆடம்பர நிகழ்வுகள் வாக்காளர்களின் அதிருப்தியை அதிகப்படுத்தின. தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு (தமாக) என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.[7][8]
திமுக தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரசு, மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கி இருந்தது. ஆனால் அக்கூட்டணி தொகுதி உடன்பாட்டு பிரச்சனைகளால் உடைந்தது. பின்னர், பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் முயற்சியால், திமுக –தமாக கூட்டணி அமைந்தது. நடிகர் ரஜினிகாந்த் இக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி அளித்தார். மேலும் இக்கூட்டணிக்கு ஆதரவாக அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தேர்தலில் பிரச்சாரம் செய்தனர்.[9][10]
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1033 பேர் போட்டியிட்டனர். அரசாங்கம் தங்களுக்கு சரியான படி தண்ணீர் கிடைப்பதில் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் 1028 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் மற்ற பகுதிகளோடு நடக்கவில்லை. [11]
கூட்டணிகள் [தொகு]
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக-[[[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது. சுப்ரமணியம் சாமியின் ஜனதா கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் இந்திய தேசிய லீக், அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின் ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.[12][8][13][14][15]
தேர்தல் முடிவுகள் [தொகு]
தேர்தல் தேதி: மே 2, 1996; முடிவுகள் அறிவிப்பு: மே 12. மொத்தம் 66.95 % பதிவாகின.[16]
| திமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
|---|---|---|---|---|---|
| திமுக | 173 | அதிமுக | 4 | பாமக | 4 |
| தமாக | 39 | காங்கிரசு | 0 | மதிமுக | 0 |
| சிபிஐ | 8 | ஜனதா தளம் | 1 | ||
| சிபிஎம் | 1 | ||||
| ஜனதா கட்சி | 1 | ||||
| பாஜக | 1 | ||||
| சுயேட்சைகள் | 1 | ||||
| பார்வார்டு ப்ளாக் | 1 | ||||
| மொத்தம் (1996) | 220 | மொத்தம் (1996) | 4 | மொத்தம் (1996) | 10 |
| மொத்தம் (1991) | 4 | மொத்தம் (1991) | 224 | மொத்தம் (1991) | 9 |
குறிப்பு: இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களும், அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியின் ஒரு பிரிவின் இரண்டு வேட்பாளர்களும் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்தின் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஆட்சி அமைப்பு [தொகு]
திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
விளைவுகள் [தொகு]
அதிமுகவின் தோல்வியால் அக்கட்சி பிளவுபட்டது. சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து போய் தனியே கட்சி தொடங்கினர். அதுவே பின்னர் எம். ஜி. ஆர் அதிமுக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. பாமக தேர்தலில் தனித்து போட்டியிடுவது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது. திமுக-தாமக கூட்டணி 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு-புதுச்சேரியில் அனைத்து (40) இடங்களை வென்றது. இதனால் மத்தியில் அமைந்த காங்கிரசல்லா ஐக்கிய முன்னணி அரசில் இரு கட்சிகளும் இடம் பெற முடிந்தது.[2][13][14][17]
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
- ↑ 2.0 2.1 Bhagat, Rasheeda (4 April 2001). "Advantage Jayalalitha?". Business Line. http://www.thehindubusinessline.com/2001/04/04/stories/040455ju.htm. Retrieved 2010-01-18.
- ↑ Panneerselvan, A. S. (28 May 2001). "JJ & Her Technicolor Cape". Outlook. http://www.outlookindia.com/article.aspx?211761. Retrieved 2010-01-18.
- ↑ Ram, Arun. (25 June 2001). "Fostering Ill-will". India Today. http://www.india-today.com/itoday/20010625/state-tn.shtml. Retrieved 2010-01-18.
- ↑ Subramanian, T. S. (14 August 1999). "Hurdles in Tamil Nadu". Frontline. http://www.hinduonnet.com/fline/fl1819/18191180.htm. Retrieved 2010-01-18.
- ↑ Menon, Jaya (17 March 2007). "Vaiko’s MDMK formally snaps ties with UPA". Indian Express. http://www.indianexpress.com/news/vaikos-mdmk-formally-snaps-ties-with-upa/25881/. Retrieved 2010-01-18.
- ↑ Subramanian, T. S. (15 September 2001). "Crusading Congressman". Frontline. http://www.hindu.com/fline/fl1617/16170180.htm. Retrieved 2010-01-18.
- ↑ 8.0 8.1 Palanithurai, Ganapathy (1998). Perception of grass root democracy and political performance. M.D. Publications. pp. 169–180. ISBN 8175330686, ISBN 9788175330689. http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160.
- ↑ ""Nenjukku Neethi" resumes". The Hindu. 5 May 2008. http://www.hindu.com/2008/05/05/stories/2008050560331000.htm. Retrieved 2010-01-21.
- ↑ Anand, S. (15 April 2002). "A Dash Of Saffron In His Broth". Outlook. http://www.outlookindia.com/article.aspx?215225. Retrieved 2010-01-18.
- ↑ http://www.hinduonnet.com/2004/03/27/stories/2004032707331200.htm
- ↑ Vimalkumar, R. (19 April 2006). "It remains backward despite having scope". The Hindu. http://www.hindu.com/2006/04/19/stories/2006041906110300.htm. Retrieved 2010-01-18.
- ↑ 13.0 13.1 Vinoj Kumar, P. C (18 January 2010). "Will Wit’s Warhorse Win ?". Tehelka. http://www.tehelka.com/story_main17.asp?filename=Ne041506up_close.asp. Retrieved 2010-01-18.
- ↑ 14.0 14.1 Dorairaj, S (7 April 2009). "Can PMK convert support base into votes in TN?". Business Line. http://www.blonnet.com/2009/04/07/stories/2009040750080400.htm. Retrieved 2010-01-18.
- ↑ Subramanian, T. S. (21 March 1998). "Messages from the States". Frontline. http://www.hinduonnet.com/fline/fl1506/15060370.htm. Retrieved 2010-01-18.
- ↑ Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
- ↑ Panneerselvan, A. S. (04 June 1997). "MGR's Foot-Soldiers". Outlook. http://www.outlookindia.com/article.aspx?203657. Retrieved 2010-01-18.
வெளி இணைப்பு [தொகு]
1996 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
|
|||||||||||||||||