இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
| இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) Communist Party of India (Marxist) |
|
|---|---|
| இதேஆ நிலை | அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி |
| பொதுச் செயலர் | பிரகாஷ் காரத் |
| மக்களவைத் தலைவர் | வாசுதேவ் ஆச்சாரியா[1] |
| மாநிலங்களவையில் தலைவர் | சீத்தாராம் யெச்சூரி[1] |
| நிறுவல் | 1964 |
| தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
| கூட்டணி | இடது முன்னணி |
| மக்களவை ஆசனங்கள் |
16 / 545
|
| மாநிலங்களவையில் ஆசனங்கள் |
11 / 245
|
| கொள்கை நிலை | கம்யூனிசம் மார்க்சியம்-லெனினியம் |
| வெளியீடுகள் | People's Democracy ஞானசக்தி மார்க்சிஸ்ட் தீக்கதிர் தேசாபிமானி Dailydesherkatha |
| மாணவரமைப்பு | இந்திய மாணவர் சங்கம் |
| இளைஞ்சரமைப்பு | இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் |
| பெண்களமைப்பு | அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் |
| தொழிலாளர் அமைப்பு | இந்திய தொழிற்சங்க மையம் |
| உழவரமைப்பு | அகில இந்திய விவசாயிகள் சங்கம் |
| வலைத்தளம் | cpim.org |
| தேர்தல் சின்னம் | |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist)) இந்தியாவிலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இந்த கட்சி கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சிபிஎம் என்றும் அழைக்கப்படுகிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கூட்டணிகள் திரிபுரா மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இந்த கட்சி முதலாளித்துவம், பேரரசுவாதம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்துவருகிறது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
உருவாக்கம் [தொகு]
சிபிஎம் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் இருந்து பிரிந்து உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிளவுபடாத இந்திய பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியை கண்டது. இந்திய பொதுவுடைமை கட்சி தெலுங்கானா, திரிபுரா மற்றும் கேரளாவில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது. இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவதற்காக ஆயுத போராட்டத்தை கைவிட்டது. 1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார்.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் அரசு, சோவியத் ஒன்றியம்த்துடன் நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-நிலபிரபுத்துவ நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போட முடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வை காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அமைச்சரவையை மத்திய அரசு தலையிட்டு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
இதே வேளையில், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும் மார்க்சிய-லெனினியக் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாற்றியது. எல்லை தகராறினால் 1962இல் நடந்த இந்திய-சீனா யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
சீனா போரின் போது, இந்திய பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்க்கும் முதலாளித்துவ நாட்டிற்க்குமான போர் என வாதிட்டனர். இந்த கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சி திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்த சித்தாந்த ரீதியானது. இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் கொண்டு இருந்த அதே வேற்றுமையாகும். வலதுசாரிகள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை சிபிஎம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்திவமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்வார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து சிபிஎம் என புது கட்சியானது.
நுற்றுக்கணக்கான பொதுவுடைமை தலைவர்கள் சீனா ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சி கூட்டத்தில் வெளிபடுத்தியதற்க்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவானதாலும் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகள் காங்கிரஸ் அரசுடம் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமை கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்கு பின், எஸ்.எ.டாங்கே தலைவராகவும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சாமதானதிற்க்கான ஒரு முயற்சி. டாங்கே வலதுசாரிகளையும் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் இடதுசாரிகளையும் பிரநிதிதுவபடுத்தினர்.
11 ஏப்ரல் 1964இல் நடந்த சிபிஐஇன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதவாளர்களின் ஒற்றுமைக்கு எதிரான மற்றும் பொதுவுடைமை கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உள்கட்சி பிரச்சனைகளை பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 100,000 பொதுவுடைமைவாதிகளை பிரநிதிதுவபடுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7வது கட்சி மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
தெனாலி மாநாட்டில், டாங்கே நடத்திய மாநாட்டை வித்தியாசப்படுத்த சீனா பொதுவுடைமை தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
தெனாலி மாநாட்டில்,பொதுவுடைமை கட்சியின் ஒரு பிரிவை பிரநிதிதுவப்படுத்திய வாங்காளத்தை சார்ந்த இடதுசாரி சீனா ஆதரவு குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம்.பசவபுன்னையா தயாரித்த வரைவு திட்டம், வர்க்க போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்வார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாற்றினர்.
தெனாலி மாநாட்டிற்கு பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்டம் வாரியிலான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்களமானது. கல்கத்தாவின் மாவட்ட கலந்தாய்வில் பரிமல் தாஸ் குப்தா(தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவு திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்று திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்ட கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கட்டா மாவட்ட கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம்.பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவு திட்டத்தை எதிர்த்தனர்.
சில்குரி மாவட்ட கலந்தாய்வில், கட்சி திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் வடக்கு வங்காளத்தை சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரேகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார். பரிமல் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநில கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
கல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாக பிரிந்தது. கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “இந்திய பொதுவுடைமை கட்சி(மார்க்சியம்)” என பெயரிட்டு கொண்டது. சிபிஎம் தன் சொந்த கட்சி திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி.சுந்தரையா கட்சியின் பொது செயலாளராக தேர்ந்தடுக்கப்பட்டார்.
மொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சதம் சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.
கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்திய சாயலில் வர்க்க மதிப்பிட்டை செய்தது, அது இந்திய பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாக கூறியது. பரிமல் தாஸ் குப்தாவின் மாற்று வரைவு திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளை போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்ப்பை பெற்றது.
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Polit Bureau) [2]
- பி. சுந்தரய்யா (பொதுச் செயலாளர்)
- பி. டி. ரணதேவ்
- பிரமோத் தாஸ்குப்தா
- ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்
- எம். பசவபுன்னையா
- ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
- பி. ராமமூர்த்தி
- ஏ. கே. கோபாலன்.
- ஜோதி பாசு
கட்சி அமைப்பு [தொகு]
2004இல் நடந்த பாராளும்ன்ற தேர்தலில் சிபிஎம் 5.66 சதவித வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 69 இடங்களில் 42.31 சதவிதத்தை சராசரியாக பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் வெளியில் இருந்து ஆதரித்தது. 2008 ஜூலை 9 இல் அமெரிககாவுடனான அணு ஒப்பந்தத்தின் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. .[3] . 2009 பாராளுமன்ற தேர்தலில் 16 உறுப்பினர்களை கட்சி கொண்டிருந்தது.
அமைப்பு [தொகு]
- அரசியல் தலைமை குழு
- மத்திய குழு
- மாநில குழுக்கள்
- மாவட்ட குழுக்கள்
- பகுதி குழுக்கள்
- உள்ளூர் குழுக்கள்
- கிளை குழுக்கள்
உறுப்பினர்கள் [தொகு]
2004இன் நிலவரப்படி கட்சியில் 867 763 பேர் உறுப்பினராக உள்ளனர்.[4]
| மாநிலம் | 2001 | 2002 | 2003 | 2004 | வாக்காளர் எண்ணிக்கையில் உறுப்பினர் சதவிதம் |
|---|---|---|---|---|---|
| ஆந்திர பிரதேசம் | 40785 | 41879 | 45516 | 46742 | 0.0914 |
| அஸ்ஸாம் | 10480 | 11207 | 11122 | 10901 | 0.0726 |
| அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 172 | 140 | 124 | 90 | 0.0372 |
| பீகார் | 17672 | 17469 | 16924 | 17353 | 0.0343 |
| சத்தீஸ்கர் | 1211 | 1364 | 1079 | 1054 | 0.0077 |
| டெல்லி | 1162 | 1360 | 1417 | 1408 | 0.0161 |
| கோவா | 172 | 35 | 40 | 67 | 0.0071 |
| குஜராத் | 2799 | 3214 | 3383 | 3398 | 0.0101 |
| ஹரியானா | 1357 | 1478 | 1477 | 1608 | 0.0131 |
| ஹிமாச்சல் பிரதேசம் | 1005 | 1006 | 1014 | 1024 | 0.0245 |
| ஜம்மு காஷ்மீர் | 625 | 720 | 830 | 850 | 0.0133 |
| ஜார்கண்ட் | 2552 | 2819 | 3097 | 3292 | 0.0200 |
| கர்நாடகா | 6574 | 7216 | 6893 | 6492 | 0.0168 |
| கேரளா | 301562 | 313652 | 318969 | 316305 | 1.4973 |
| மத்திய பிரதேசம் | 2243 | 2862 | 2488 | 2320 | 0.0060 |
| மகராஷ்டிரா | 8545 | 9080 | 9796 | 10256 | 0.0163 |
| மணிப்பூர் | 340 | 330 | 270 | 300 | 0.0195 |
| ஓடிஸா | 3091 | 3425 | 3502 | 3658 | 0.0143 |
| பஞ்சாப் | 14328 | 11000 | 11000 | 10050 | 0.0586 |
| இராஜஸ்தான் | 2602 | 3200 | 3507 | 3120 | 0.0090 |
| சிக்கிம் | 200 | 180 | 65 | 75 | 0.0266 |
| தமிழ் நாடு | 86868 | 90777 | 91709 | 94343 | 0.1970 |
| திரிபுரா | 38737 | 41588 | 46277 | 51343 | 2.5954 |
| உத்தர்காண்ட் | 700 | 720 | 740 | 829 | 0.0149 |
| உத்தரப் பிரதேசம் | 5169 | 5541 | 5477 | 5877 | 0.0053 |
| மேற்கு வங்காளம் | 245026 | 262882 | 258682 | 274921 | 0.579 |
| மத்திய குழு உறுப்பினர்கள் | 96 | 95 | 95 | 87 | |
| மொத்தம் | 796073 | 835239 | 843896 | 867763 | 0.1292 |
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "On P.R. Dasmunshi's Statement | Communist Party of India (Marxist)". Cpim.org (13 November 2007). பார்த்த நாள் 2012-12-20.
- ↑ முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்
- ↑ 9 July 2008 தேதியிட்ட தி ஹிந்து வின் கட்டுரை : ஜனாதிபதியை சந்தித்த இடதுசாரிகள் விலகல் கடிதத்தை கொடுத்தனர்
- ↑ உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm. வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf. பாண்டிச்சேரி தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, சண்டிகார் பஞ்சாப்பாக கூட்டப்பட்டுள்ளது.
வெளி இணைப்புகள் [தொகு]
- கட்சியின் திட்டம் தமிழில், 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
- கட்சியின் திட்டம் ஆங்கிலத்தில்
- கட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்
- கட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்
- மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்
- தமிழ்நாடு மாநிலக்குழு