குசராத்து
| குசராத்து ગુજરાત |
|||
| — மாநிலம் — | |||
|
|||
|
|
|||
|
|
|||
| அமைவிடம் | அமைவு: | ||
| நாடு | |||
| மாநிலம் | குசராத்து | ||
| மாவட்டங்கள் | 26 | ||
| நிறுவப்பட்ட நாள் | 1 மே 1960 | ||
| தலைநகரம் | காந்திநகர் | ||
| மிகப்பெரிய நகரம் | அகமதாபாத் | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | |||
| ஆளுநர் | டாக்டர் கமலா பெனிவால் | ||
| முதலமைச்சர் | நரேந்திர மோடி | ||
| Chief Justice | Hon'ble Mr. Justice S. J. Mukhopadhaya | ||
| சட்டமன்றம் (தொகுதிகள்) | Unicameral (182) | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
50 (10th) (2000[update]) • 258 /km2 (668 /sq mi) |
||
| ம. வ. சு (2005) | 0.621 (medium) (14th) |
||
| கல்வியறிவு | 69.8% (6th) | ||
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) | ||
| பரப்பளவு | 196024 கிமீ2 (75685 சதுர மைல்) | ||
| ISO 3166-2 | IN-GJ | ||
| இணையதளம் | www.gujaratindia.com | ||
குசராத்து (குஜராத்து, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாகிஸ்தானும் வடக்கில் ராஜஸ்தானும் எல்லைகளாக அமைந்துள்ளன.
காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லப்பாய் படேல் ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.
பொருளடக்கம் |
வரலாறு[தொகு]
| Gujarat state symbols | |
|---|---|
| விலங்கு | ஆசிய சிங்கம் |
| பறவை | செந்நாரை |
| நடனம் | கர்பா நடனம் |
| மலர் | |
| மொழி | குஜராத்தி |
| பாடல் | ஜெய ஜெய கராவி குஜராத் |
| விளையாட்டு | |
| மரம் | |
குசராத்து (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கிபி 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின்கீழ் இருந்தது. குசராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னிலை பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குசராத்தை அரசாண்டனர். கிபி 770களில் அரேபிய படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குசராத்தில் குடியெறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இசுலாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
கிபி 1297 – கிபி 1850[தொகு]
கிபி 1297- 1298 ல் அலாவுதீன் கீல்ஜி, தில்லி சுல்தான் , அன்கில்வாரா நகரை அழித்து குசராத்தை தில்லி சுல்தானியத்துடன் இணைத்தான். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டான். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் அகமது ஷா, அகமதாபாத் நகரை நிறுமானம் செய்து, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தான். குசராத்து சுல்தானியத்தின் கிபி 1576 ஆம் ஆண்டு, பேரரசர் அக்பரின் படையெடுப்பின் முலம் முடிவுக்கு வ்ந்தது. மொகலாயர்களுக்கு பின் மராட்டிய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சிசெய்யப் பட்டது.
1614 AD - 1947 AD[தொகு]
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான தாமன், தியு ஆகிய இடங்களிலும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் கிழக்கிந்திய கம்பெனி, 1614ல், தனது முதல் தொழில்சாலையை சூரத்து நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த இரண்டாம் ஆங்கிலேய- மராட்டிய போரின் முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.
இந்திய விடுதலை போராட்டம்[தொகு]
இந்திய விடுதலை போராட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, வல்லபாய் படேல, மௌராஜி தேசாய் ஆகியோர் குசராத்தை சேர்ந்தவர்கள். மேலும் பாக்கித்தானின் முதல் கவனர் செனரலான முகமது அலி ஜின்னா குசராத்தைச் சார்ந்தவர்.
விடுதலைக்குப் பின்[தொகு]
இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு, பல சிறிய அரசுகளாக இருந்த குசராத்தை பம்பாய் மாகாணம் அமைக்கப்பட்டது. 1960 ம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள், பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு மகராஷ்டிரா மாநிலமும், குசராத்து மாநிலமும் அமைக்கப்பட்டன. குசராத்து மாநிலத்தின் தலைநகராக அகமதாபாத் நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் காந்திநகருக்கு மாற்றப்பட்டது.
2001 குசராத்து நிலநடுக்கம்[தொகு]
2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.
2002 குசராத்து வன்முறை[தொகு]
கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவிஇந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். [1] மத்திய மற்றும் மாநில அரசினை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.
மக்கள்[தொகு]
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 50,671,017 | 100% |
| இந்துகள் | 45,143,074 | 89.09% |
| இசுலாமியர் | 4,592,854 | 9.06% |
| கிறித்தவர் | 284,092 | 0.56% |
| சீக்கியர் | 45,587 | 0.09% |
| பௌத்தர் | 17,829 | 0.04% |
| சமணர் | 525,305 | 1.04% |
| ஏனைய | 28,698 | 0.06% |
| குறிப்பிடாதோர் | 33,578 | 0.07% |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Gujarat riot death toll revealed". BBC News (2005). பார்த்த நாள் April 15, 2006.
- ↑ Census of india , 2001
- ↑ [1]கோத்ர இரயில் பெட்டியை பயணிகளுடன் எரித்த வழக்கில் தீர்ப்பு
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
பாகிஸ்தான் | ராஜஸ்தான் | ![]() |
|
| அராபியக் கடல் | மத்தியப் பிரதேசம் | |||
| அராபியக் கடல் | தாமன் மற்றும் தையு தாதர் மற்றும் நாகர் ஹவேலி மகாராட்டிரம் |
