பாரசீக மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரசீக மொழி
فارسی
 நாடுகள்: ஈரான்[1]

ஆப்கானிஸ்தான்[1](தாரி ஆக)
தாஜிக்ஸ்தான்[1](தாஜிக் ஆக)
உஸ்பெகிஸ்தான்
ஈராக்
பகுரைன்
அசர்பைஜான்[2]
(மேலும் பல நாடுகள்)

 பேசுபவர்கள்: 60 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 இந்திய-ஈரானியன்
  ஈரானிய மொழிகள்
   மேற்கு ஈரானிய மொழிகள்
    தென்மேற்கு ஈரானிய மொழிகள்
     பாரசீக மொழி 
எழுத்து முறை: அராபிய அரிச்சுவடி (பாரசீக அரிச்சுவடி)
சிரில்லிக் எழுத்துக்கள் (தாஜிக் அரிச்சுவடி)
எபிரேய அரிச்சுவடி
பாரசீக புடையெழுத்து 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: ஈரான் கொடி ஈரான்
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்:
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: fa
ஐ.எசு.ஓ 639-2: per (B)  fas (T)
ISO/FDIS 639-3: பலவாறு:
pes — மேற்கு பாரசீகம்
prs — கிழக்கு பாரசீகம்
tgk — தாஜிக் மொழி
aiq — அய்மக்
bhh — புக்கோரி
haz — கசாரகி
jpr — டிசிடி
phv — பகல்வனி
deh — டேஃவாரி
jdt — யுகுரி
ttt — டட் 

பாரசீக மொழி (Persian language) ஈரான், ஆப்கானிஸ்தான், தசகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னர் இந்திய உப கண்டத்தில் இரண்டாம் மொழியாகக் காணப்பட்டது. ஆதலால் இந்தி, சிந்தி, வங்காள மொழி, உருது ஆகிய மொழிகளில் இதன் தாக்கத்தைக் காணலாம். பாரசீக மொழியானது இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவலாகவும், ஆர்மீனியா, ஈராக், பஹ்ரைன், ஓமான் ஆகிய நாடுகளில் ஓரளவிலும் பேசப்படுகிறது.

இம்மொழியை ஆப்கானிஸ்தானில் தாரி என்றும் தாஜிகிஸ்தானில் தாஜிக் என்றும் ஈரானிலும் ஏனைய நாடுகளிலும் பார்சி என்றும் அழைக்கப்படுகிறது. தாஜிகிஸ்தானில் இதனை இரசிய மொழி போன்று திரிபடைந்த சிரிலிய வரிவடிவத்தில் எழுதப்பட்டபோதிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஏனைய நாடுகளில் அரபு மொழி எழுத்துக்களிலிருந்து திரிபடைந்த வரிவடிவத்தைப் பயன்படுத்தி வலமிருந்து இடமாகவே பாரசீக மொழி எழுதப்படுகிறது. பாரசீகத்தை இஸ்லாமியப் படைகள் வெற்றி கொண்டு, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளின் பின்னரே பாரசீக மொழியானது அரபு வரிவடிவத்தில் எழுதப்படத் தொடங்கியது. அதற்கு முன்னர், இன்றைய ஈரானின் பண்டைய மொழிகளான பஹ்லவி மற்றும் அவெசுதா ஆகிய மொழிகளின் வரிவடிவங்களிலேயே அது எழுதப்பட்டு வந்தது.

முகலாயப் பேரரசர்களின் காலத்தில் பேரரசின் ஆட்சி மொழியாகப் பாரசீக மொழியே காணப்பட்டது. முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தொகுத்தெழுதிய பதாவா ஆலம்கீரி என்ற, ஹனபி சட்டத் துறையைச் சார்ந்த இஸ்லாமிய சட்ட நூலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 Samadi, Habibeh; Nick Perkins (2012). Martin Ball, David Crystal, Paul Fletcher. ed. Assessing Grammar: The Languages of Lars. Multilingual Matters. p. 169. ISBN 978-1-84769-637-3. 
  2. Windfuhr, Gernot. The Iranian Languages. Routledge. 2009. p. 418.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீக_மொழி&oldid=1703476" இருந்து மீள்விக்கப்பட்டது