சபர்மதி ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சபர்மதி ஆசிரமம்

சபர்மதி ஆசிரமம், அகமதாபாத்
ஆள்கூறுகள்: 23°03′36″N 72°34′51″E / 23.06, 72.58083அமைவு: 23°03′36″N 72°34′51″E / 23.06, 72.58083
பெயர்
பெயர்: சபர்மதி ஆசிரமம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: குசராத்
அமைவு: சபர்மதி, அகமதாபாத்
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்: 17 சூன் 1917
கட்டடக் கலைஞர்: சார்லசு கொர்ரியா

சபர்மதி ஆசிரமம் (Sabarmati Ashram, குசராத்தி: સાબરમતી આશ્રમ) அகமதாபாத் நகரின் நகரமண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது மோகன் கரம்சந்த் காந்தியின் வாழ்விடங்களில் ஒன்றாக இருந்தது. இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சபர்மதி_ஆசிரமம்&oldid=1359182" இருந்து மீள்விக்கப்பட்டது