ஏ. கே. கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. கே. கோபாலன்
கண்ணூரில் அமைந்துள்ள ஏ. கே. கோபாலனின் சிலை
இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் அலுவல்சாராத எதிர்க்கட்சித் தலைவர்
தொகுதிகாசர்கோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அயில்யாத் குட்டியாரி கோபாலன்

(1904-10-01)அக்டோபர் 1, 1904
கண்ணூர், கேரளா, இந்தியா
இறப்பு22 மார்ச்சு 1977(1977-03-22) (அகவை 72)
கேரளா, இந்தியா
அரசியல் கட்சிமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு
துணைவர்சுசீலா கோபாலன்

ஏ. கே. கோபாலன் (A. K. Gopalan அல்லது AKG) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தைச் சார்ந்தவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் அலுவல்சாராத எதிர்க்கட்சி தலைவராவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

அக்டோபர் மாதம் 1ஆம் தியதி 1904 ஆம் ஆண்டு பேரலாசேரி எனும் வடகேரள ஊரில் பிறந்தார். கல்வியை தெல்லிசேரி எனும் ஊரில் கற்றார். கற்கும் போது தான் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என விரும்பினார். காந்தி இந்தியச் சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்ற போது, கோபாலனும் அவ்வியக்கத்தின் கிலாபாத் இயக்கத்தில் பங்கு பெற்றார்.[1] அதன் பின் முழுநேர மக்கள் பணி மற்றும் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். பின்னர் சிறைத்தண்டனை பெற்றார். சுதந்திரத்திற்குப் பின் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். தனது 72 வது வயதில் மார்ச் மாதம் 22 ஆம் நாள் 1977-ல் மரணமடைந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸ்[தொகு]

1927 ஆம் ஆண்டு இவர் தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சியின் சார்பில் நடைபெற்ற கதர் இயக்கம் மற்றும் அரிஜன முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றினார். உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 1930 சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1937-ல் மலபார் பகுதியிலிருந்து சென்னைக்கு உண்ணாவிரத நடைபயணத்தைத் தொடங்கினார். இந்தியக் காப்பி விடுதியின் தொழிலாளர் போராட்டம் இவரது தலைமையில் நடந்தது.

திருமண வாழ்க்கை[தொகு]

கோபாலன் மார்க்சியக் கட்சியைச் சேர்ந்த சுசீலாவை மணந்தார். இவருக்கு லைலா என்று ஒரு மகள் உண்டு. காசர்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் லைலாவை மணம் முடித்தவகையில் இவரது மருமகன் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._கோபாலன்&oldid=3670556" இலிருந்து மீள்விக்கப்பட்டது