மாணிக் சர்க்கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக் சர்க்கார் (Manik Sarkar,வங்காளம்:মানিক সরকার ;பிறப்பு 1949) ஓர் இந்திய மார்க்சிய அரசியல்வாதியும் திரிபுரா மாநில முதலமைச்சரும் ஆவார். 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலமைச்சராக இருந்து வருகிறார்.சிபிஎம் கட்சியின் உயர்மட்ட அரசியல் மற்றும் கொள்கை வகுக்கும் குழுவான பொலிட்பீரோவின் உறுப்பினர்.[1][2]. இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) தலைவராக பங்காற்றியுள்ளார். திரிபுராவில் சமசிந்தனை உள்ள நட்புக் கட்சிகளுடன் இடது முன்னணிக் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார்.[3] 10 மார்ச்சு 2008 அன்று ஆறாவது இடது முன்னணி ஆட்சிக்கு தலைமையேற்று முதல்வராக பொறுப்பேற்றார்.[4]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ பொலிட்பீரோ உறுப்பினர் பட்டியல் 7வது (1964)காங்கிரசு முதல் 18வது (2005)வரை
- ↑ பொலிட்பீரோ உறுப்பினர்கள் மற்றும் நடுவண் குழு உறுப்பினர்களின் பட்டியல் 19வது காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
- ↑ சிபிஎம் அரசுகள்
- ↑ 6வது இடதுமுன்னணி அரசு பொறுப்பேற்கிறது
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் மாணிக் சர்க்கார் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |