தேசிய முற்போக்கு திராவிட கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேசிய முற்போக்கு திராவிட கழகம்
Election symbol of DMDK
தலைவர் விஜயகாந்த்
நிறுவல் 2005
கூட்டணி யாரும் இல்லை headquarters = கோயம்பேடு, சென்னை
வலைத்தளம் http://www.dmdkindia.org

இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும்.

பொருளடக்கம்

கட்சிக் கொள்கைகள் [தொகு]

தனது கொள்கைகளாக தேமுதிக அறிவுத்தளவை பின்வருமாறு:[1]

  • “அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.
  • அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.
  • தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.
  • தீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.
  • அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.
  • தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.
  • இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.
  • விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.
  • நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.
  • ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.

2006 சட்டமன்றத் தேர்தல் [தொகு]

தே.மு.தி.க விளம்பரம், தஞ்சாவூர்

இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.

15வது மக்களவைத் தேர்தல் [தொகு]

15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது [2].

தொகுதி வேட்பாளர்[3] பெற்ற வாக்குகள்
திருவள்ளூர் (தனி) சுரேஷ். 110,452
வட சென்னை யுவராஜ் 66,375
தென்சென்னை வி.கோபிநாத் 67,291
மத்திய சென்னை வி.வி.ராமகிருஷ்ணன் 38,959
ஸ்ரீபெரும்புதூர் மு.அருண் சுப்பிரமணியன். 84,530
காஞ்சீபுரம் (தனி) தமிழ்வேந்தன். 103,560
அரக்கோணம் லயன் எஸ்.சங்கர் 82,038
வேலூர் செளகத் ஷெரீப் 62,696
கிருஷ்ணகிரி பி.டி.அன்பரசன் 97,546
தர்மபுரி இளங்கோவன் 103,494
திருவண்ணாமலை எஸ்.மணிகண்டன் 56,960
ஆரணி இரா. மோகன் 105,729
விழுப்புரம் கணபதி 127,476
கள்ளக்குறிச்சி சுதீஷ் 132,223
சேலம் அழகபுரம் மோகன்ராஜ் 120,325
நாமக்கல் என். மகேஷ்வரன் 79,420
ஈரோடு முத்து வெங்கடேஸ்வரன். 91,008
திருப்பூர் திணேஷ்குமார் 86,933
நீலகிரி (தனி) செல்வராஜ். 76,613
கோவை ஆர்.பாண்டியன். 73,188
பொள்ளாச்சி கே.பி. தங்கவேல். 38,824
திண்டுக்கல் ப. முத்து வேல்ராஜ் 100,788
கரூர் ஆர்.ராமநாதன். 51,196
திருச்சி ஏ.எம்.ஜி. விஜயகுமார் 61,742
பெரம்பலூர் துரை.காமராஜ். 74,317
கடலூர் முன்னாள் அமைச்சர் தாமோதரன் 93,172
சிதம்பரம் (தனி) சபா சசிகுமார். 66,283
மயிலாடுதுறை ஜி.கே.பாண்டியன் 44,754
நாகப்பட்டினம் (தனி) மகா.முத்துக்குமார். 51,376
தஞ்சாவூர் டாக்டர் ராமநாதன். 63,852
சிவகங்கை பர்வத ரெஜீனா பாப்பா 60,054
மதுரை கே. கவிஅரசு 54,419
தேனி எம்.சி. சந்தானம் 70,908
விருதுநகர் க. பாண்டியராஜன் 125,229
ராமநாதபுரம் சிங்கை ஜின்னா. 49,571
தூத்துக்குடி சுந்தர் 61,403
தென்காசி (தனி) இன்பராஜ் 75,741
திருநெல்வேலி எஸ். மைக்கேல் ராயப்பன் 94,562
கன்னியாகுமரி எஸ். ஆஸ்டின் 68,472
புதுச்சேரி கே.ஏ.யூ. அசனா 52,638

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் [தொகு]

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[4]

வெளி இணைப்பு [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. [1]
  2. http://newstodaynet.com/newsindex.php?id=16000%20&%20section=6
  3. http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/dmdk-candidates.html
  4. தேமுதிகவுக்கு 41 இடங்கள் தென் மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளை கேட்கலாம்