அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
| அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
| தலைவர் | ஜெயலலிதா |
|---|---|
| நிறுவல் | எம். ஜி. இராமச்சந்திரன், அக்டோபர் 17, 1972 |
| தலைமையகம் | #226, அவ்வை சன்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600014 |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டனி (1998 & 2004-06) மூன்றாவது அணி (2008-present) |
| கொள்கை நிலை | சமூக ஜனநாயகம்/Populist |
| வெளியீடுகள் | Dr. நமது எம்ஜிஆர் |
| வலைத்தளம் | http://www.aiadmkallindia.org/ |
| கட்சிக் கொடி | |
| இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க | |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு முக்கிய அரசியற் கட்சியாகும். இக்கட்சி மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் (எம்.ஜி.ஆர்) ஆரம்பிக்கப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
[தொகு] எம்.ஜி.ஆர். காலம்
எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), அனைத்திந்திய பார்வார்டு பிளாக், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[2] நான்முனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.
சினிமா துறையில் உள்ளவர்களும் அரசியலில் பிரகாசிக்க முடியும் என்ற இப்போதைய அரசியல்வாதிகளுக்கே முன்னோடியாக இருந்தும் இருப்பவரும் எம்.ஜி.ஆர் தான். இவரைப் பின் தொடர்ந்துதான் என்.டி.ராமராவ் ஆந்திராவில் நின்று வெற்றிபெற்றார். அதோடு பிரசாரத்திற்கே செல்லாமல் நின்று வெற்றிப்பெற்றவர் என்ற பட்டத்துக்கும் பெருமையானவர் எம்.ஜி.ஆர்.
ஏழைகளின் உண்மையான தலைவன் எம்.ஜி.ஆர் என்றே பலரும்[எவர்?] கூறுகின்றனர். அனைத்து தரப்பு மக்களையும் மிக நேர்த்தியாக கவர்ந்த ஒரு மா மனிதர் எம்.ஜி.ஆர் என்றே பலரும்[எவர்?] கூறுவதுண்டு.
[தொகு] பெயர் மாற்றம்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
[தொகு] அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள்.
எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறிதான் ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.
[தொகு] 15வது மக்களவை
15வது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[3] 1. திருவள்ளூர் (தனி) 2. தென்சென்னை 3. விழுப்புரம் (தனி) 4. சேலம் 5. திருப்பூர் 6. பொள்ளாச்சி 7. கரூர் 8. திருச்சி 9. மயிலாடுதுறை
[தொகு] தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்
[தொகு] மக்களவை
| வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | வேட்பாளர் பட்டியல் |
|---|---|---|---|---|
| 1977 | 6வது மக்களவை | 5,365,076 | 17 | |
| 1980 | 7வது மக்களவை | 4,674,064 | 2 | |
| 1984 | 8வது மக்களவை | 3,968,967 | 12 | |
| 1989 | 9வது மக்களவை | 4,518,649 | 11 | |
| 1991 | 10வது மக்களவை | 4,470,542 | 11 | |
| 1996 | 11வது மக்களவை | 2,130,286 | 0 | |
| 1998 | 12வது மக்களவை | 6,628,928 | 18 | |
| 1999 | 13வது மக்களவை | 6,992,003 | 10 | |
| 2004 | 14வது மக்களவை | 8,547,014 | 0 | |
| 2009 | 15வது மக்களவை | 6,953,591 | 9 |
[தொகு] சட்டசபை
| வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | வேட்பாளர் பட்டியல் |
|---|---|---|---|---|
| 1977 | 6வது சட்டசபை | 5,194,876 | 131 | [1] |
| 1980 | 7வது சட்டசபை | 7,303,010 | 129 | [2] |
| 1984 | 8வது சட்டசபை | 8,030,809 | 134 | |
| 1989 | 9வது சட்டசபை | 148,630 | 2 | |
| 1991 | 10வது சட்டசபை | 10,940,966 | 164 | |
| 1996 | 11வது சட்டசபை | 5,831,383 | 4 | |
| 2001 | 12வது சட்டசபை | 8,815,387 | 132 | |
| 2006 | 13வது சட்டசபை | 10,768,559 | 61 | |
| 2011 | 14வது சட்டசபை | 1,41,49,681 | 146 |
[தொகு] புதுச்சேரி
| வருடம் | பொதுத்தேர்தல் | கிடைத்த வாக்குகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் |
|---|---|---|---|
| 1974 | 3வது சட்டசபை | 60,812 | 12 |
| 1977 | 4வது சட்டசபை | 69,873 | 14 |
| 1977 | 6வது மக்களவை | 115,302 | 1 |
| 1980 | 5வது சட்டசபை | 45,623 | 0 |
| 1985 | 6வது சட்டசபை | 47,521 | 6 |
| 1990 | 7வது சட்டசபை | 76,337 | 3 |
| 1991 | 8வது சட்டசபை | 67,792 | 6 |
| 1996 | 9வது சட்டசபை | 57,678 | 3 |
| 1998 | 12வது மக்களவை | 102,622 | 0 |
| 2001 | 10வது சட்டசபை | 59,926 | 3 |
| 2006 | 11வது சட்டசபை | 3 | |
| 2011 | 12வது சட்டசபை | 5 |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545.
- ↑ 1977 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
- ↑ http://thatstamil.oneindia.in/news/2009/04/09/tn-list-of-admk-candidates.html
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||||||||||||||||||||