விருத்தாச்சலம்
| விருத்தாச்சலம் | |
| — முதல் நிலை நகராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கடலூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஆர். கிர்லோஸ்குமார் [3] |
| நகராட்சி் தலைவர் | அரங்கநாதன் |
| சட்டமன்றத் தொகுதி | விருத்தாச்சலம் |
| சட்டமன்ற உறுப்பினர் |
பி. வி. பி. முத்துக்குமார் (தேமுதிக) |
| மக்கள் தொகை | 59,300 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
விருத்தாச்சலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
பெயர்க்காரணம் [தொகு]
"விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 59,300 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
புவியியல் [தொகு]
இந்நகரம் [5] -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பள்ளிக்கூடங்கள் [தொகு]
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி
- பாத்திமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- பேபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- சரசுவதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
- டேனிசுமிசன் மேல்நிலைப் பள்ளி
- கலைவாணி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
- சாரதா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
பார்க்க வேண்டிய இடங்கள் [தொகு]
- பழமலை நாதர்(விருத்தகிரிசுவரர்) ஆலயம் (பெரியகோயில் என வழங்கப்படுகிறது)
- கொளஞ்சியப்பர் திருக்கோயில்
- ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக பெருமாள் ஆலயம்
- பீங்கான் தொழிற்சாலை
- முந்திரிப்பண்ணை
- திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக்கல்லூரி
மத சம்பந்தமான விழாக்கள் [தொகு]
- விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசிமகம்
- விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசி மாத தேர்திருவிழா
- புரட்டாசி மாத கருடசேவை
அரசியல் [தொகு]
விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் கடலூர் தொகுதியின் கீழ் வருகிறது. 2006ல் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார்.
திரையரங்குகள் [தொகு]
- சந்தோஷ்குமார் பேலஸ்
- பி. வி. ஜி. பேலஸ்
- ஜெய் சாய் கிருஷ்ணா பேலஸ்
- ராஜேஸ்வரி தியேட்டர் (தற்போது இயக்கத்திலில்லை)
- சுரேஷ் தியேட்டர் (தற்போது இயக்கத்திலில்லை)
- சபிதா பேலஸ் (திருமண மண்டபமாக மாற்றப்பட்டுவிட்டது)
இதையும் பார்க்கவும் [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ Falling Rain Genomics, Inc - Vriddhachalam