விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விடுதலைச் சிறுத்தைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Viduthalai Chiruthaigal Katchi banner.png
தலைவர் தொல். திருமாவளவன்
நிறுவல் 1982 - மலைச்சாமி தேவேந்திரர் என்பவரால் தொடங்கப்பட்டது.
கொள்கை நிலை தலித்தியம்
வலைத்தளம் http://www.vck.in/
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal) தமிழ் நாட்டு மாநில அரசியல் கட்சி ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி போலவே தமிழ்நாட்டில் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரில் மலைச்சாமி தேவேந்திரர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மலைச்சாமி தேவேந்திரர் செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் தலைவராக இருந்தார்.[1] இக்கட்சி அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்ளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. இக்கட்சியின் தற்போதைய தலைவர் தொல். திருமாவளவன் ஆவார்.

தேர்தல் வெற்றிகள்[தொகு]

தமிழகத்தின் 13வது சட்டமன்றத்தில் இக்கட்சி வென்ற 2 தொகுதிகள் வருமாறு;

மங்களூர், காட்டுமன்னார் கோயில்

15வது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false

வெளி இணைப்புகள்[தொகு]