இந்து மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்து மக்கள் கட்சி
தலைவர் அர்ஜுன் சம்பத்
தொடக்கம் 1993
தளம் http://imkhindu.com

இந்து மக்கள் கட்சி தமிழ் நாட்டிலுள்ள இந்து சமயம் சார்ந்த அரசியல் கட்சியாகும். தற்போதைய தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவார்.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க, உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளில் பணியாற்றிய அர்ஜுன் சம்பத் என்பவரால் 1993 ஆம் வருடம், இந்து மக்கள் கட்சி அமைப்பு ரீதியாக தொடங்கப்பட்டது.

கோரிக்கைகள்[தொகு]

  • சாதி வெறியை தூண்டும் சங்கங்களை தடைசெய்ய வேண்டும்
  • அனைத்து சூதாட்டங்களையும் தடைசெய்ய வேண்டும்
  • மதுக்கடைகளையும், போதை பொருட்களையும் தடைசெய்ய வேண்டும்
  • ஆபாசமாக பெண்களை சித்தரிக்கும் சினிமா, பத்திரிக்கைகளை தடைசெய்ய வேண்டும்
  • அனைத்து மதத்தவருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை
  • ஆலயங்களின் நிர்வாகத்தை அரசு மற்றும் அரசியல் சார்பற்ற அறவோர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்
  • காவிரி நதி நீரில் தமிழகத்திற்குரிய பாரம்பரிய உரிமைகளை காப்பற்ற வேண்டும்
  • கச்சத் தீவில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்
  • ஊழல் அரசியல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்
  • நதிகளை தேசியமாக்க வேண்டும்
  • தென்னகத்தின் நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
  • காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள விசேஷ அந்தஸ்து போல் தமிழகத்திற்கும் வழங்க வேண்டும்
  • பாகிஸ்தான் மீது போர் தொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க வேண்டும்
  • இலங்கை மீது போர் தொடுத்து தனித் தமிழீழம் அமைத்திட வேண்டும்
  • இந்து யாத்ரிகர்களுக்கும் ஹஜ் பயனிகளை போல உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
  • முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர் உரிமையை நிலைநாட்டுதல்
  • சுற்றுச் சூழலுக்கு கேடு செய்யும் அனல் மின்சாரம் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் அனுமின்சாரம் ஆகியவற்றை எதிர்ப்பது, சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின்சாரத்தை ஊக்குவித்தல்.

அரசியல் நிகழ்வுகள்[தொகு]

  • தமிழ் திரைப்பட நடிகர்கள் பலர் மீது மதரீதியான மற்றும் பண்பட்டு ரீதியான புகார்கள் கொடுத்துள்ளது[1][2][3]
  • கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்கவும், தமிழீழ மக்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் போராடிவருகிறது[4]


மேற்கோள்கள்[தொகு]

  1. கமல், திரிஷாவுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்!
  2. [1]
  3. [2]
  4. கச்சத்தீவில் போராட்டம் மாலைமலர்
"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_மக்கள்_கட்சி&oldid=1611149" இருந்து மீள்விக்கப்பட்டது