இந்து முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்து முன்னணி
நிறுவனர் இராமகோபாலன்
தொடக்கம் 1980
கொள்கை இந்துத்துவம்
இந்திய தேசியம்
ஒருங்கிணைந்த மனிதநேயம்
பழைமைவாதம்
இணையதளம்
வார்ப்புரு:Website

இந்து முன்னணி தமிழ் நாட்டில் உள்ள இந்து சமயம் சார்ந்த ஒரு அமைப்பு . இது இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச மற்றும் ஹிந்து மத நினைவுக்கட்டிடங்களை பாதுகாக்க பாடுபடும் ஓர் இயக்கமாகும். [சான்று தேவை] இதன் நிறுவனத் தலைவர் இராமகோபாலன் ஆவார்.

வரலாறு[தொகு]

 • மீனாட்சிபுரம் என்ற ஊரில் நடந்த மதமாற்றத்தை எதிர்த்து 1980ல் இந்து முன்னணி துவக்கப்பட்டது. இந்துக்களின் உரிமைகளை மீட்பதற்காகவும், நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும், கட்டாய மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.[1].

கோரிக்கைகள்[தொகு]

 • கோவில்களை நிர்வகிக்க சர்ச், மசூதி போல் தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
 • பாரத நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான குடியியல் சட்டம் கொண்டு வரவேண்டும்.
 • குடும்பக்கட்டுப்பாடு நல்லதானால் எல்லா மதத்தினருக்கும் கட்டாயமாக்க வேண்டும்.
 • பாரதம் முழுதும் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
 • பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும்.
 • அயோத்தி, காசி, மதுரா, ஆலயங்கள் மீட்கப்பட வேண்டும்.
 • காஷ்மீரில் உள்ள பிரிவினையைத் தூண்டும் 370ம் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
 • நல்லொழுக்கம் வளர, ஆன்மிகக்கல்வியைப் போதிக்க வேண்டும்.
 • சொந்த நாட்டிலேயே இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

செயல்பாடுகள்[தொகு]

மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற இந்துக்களுக்கு எதிரான மதமாற்றத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 1982ஆம் வருடம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்துக்களை ஒன்று திரட்டி மக்களின் ஆதரவை இந்து முன்னணி பெற்றது. ஆண்டு தோறும் வினாயக சதுர்த்தி விழாவினை ஏற்பாடு செய்து, விநாயகர் ஊர்வலம் நடத்துவது இந்து முன்னணியின் பணிகளுள் ஒன்றாகும். மே 16, 2006ஆம் வருடம், வேலூரில் உள்ள ஜலகண்டேஷ்வரர் திருக்கோவிலில் சிவலிங்கம் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில், வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. [2]

அரசியல் நிகழ்வுகள்[தொகு]

 • தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் கட்டண தரிசனம் நீக்கக் கோரி போராடுகிறது[3].
 • காதலர் தினத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்[4]
 • கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வேண்டி போராட்டம் நடத்துகிறார்கள்[5]

புதிய தலைமுறை தொ.கா எதிரான செயற்பாடுகள்[தொகு]

தாலி தொடர்பான விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என இந்து முன்னணி நடத்திய போராட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ஒரு ஒளிப்படக்காரர் தாக்கப்பட்டதாகவும், அவரது கருவிகள் உடைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விவாத நிகழ்ச்சியை எதிர்த்ததும், இந்தத் தாக்குதலும், இது போன்ற முன்னைய பல நிகழ்வுகளும் இந்தக் கட்சியைக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முனையும் ஒரு அமைப்பாக முன்னிறுத்தி உள்ளது.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. நிகழ்வுகள்
 2. [1]
 3. இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்
 4. காதலர் தினத்துக்கு இந்து முன்னணி எதிர்ப்பு நாய் – கழுதைக்கு மாலை மாற்றி திருமணம்
 5. நக்கீரன் செய்தி
 6. Tamil news channel attacked in Chennai
"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_முன்னணி&oldid=1816880" இருந்து மீள்விக்கப்பட்டது