புது தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுதில்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புது தில்லி
—  தலைநகரம்  —
புது தில்லி
இருப்பிடம்: புது தில்லி
, தேசிய தலைநகர மண்டலம்
அமைவிடம் 28°42′N 77°12′E / 28.7, 77.2அமைவு: 28°42′N 77°12′E / 28.7, 77.2
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தேசிய தலைநகர மண்டலம்
மாவட்டம் புது தில்லி
ஆளுநர்
முதலமைச்சர்
நகரத் தந்தை ஆஷா ராம் வர்மா
மக்கள் தொகை

அடர்த்தி

321 (2006)

7,538 /km2 (19 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

42.7 சதுர கி.மீட்டர்கள்s (16.5 சதுர மைல்)

216 மீட்டர்s (709 அடி)

புது தில்லியின் இருப்பிடம்
புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்

புது தில்லி (New Delhi) இந்தியாவின் தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்காவுன் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.

இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, 1911 திசம்பர் 15 இல் நடைபெற்றது[1]. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புதுதில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[2] 1931 பெப்ரவரி 13 அன்று [3] பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. 2011 திசம்பர் 12 இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது[4]. புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது[5].

புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது[6]. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்[7], நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது[8]. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது[9]. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது[10]. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது[11].

வரலாறு[தொகு]

தில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது[12]

பத்தாம் நூற்றாண்டில், புது தில்லியை கண்டுபிடித்த ப்ரித்திவிராஜ சவுகான் நினைவு அருங்காட்சியத்தின் நடைபாதை.

நிறுவியது[தொகு]

இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது[13].

12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர்[14][15]. மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள கரோனேசன் பூங்காவில் அடிக்கல் நாட்டினார்.[16][17]. புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது[18][19].

புவி அமைப்பு[தொகு]

தில்லி பெருநகரப் பகுதயில், 42.7சதுர கி.மீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது[20]. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்[21]

காலநிலை[தொகு]

புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் 46 °C (115 °F)ம், குளிர் காலங்களில் 0 °C (32 °F)ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.

தட்பவெப்ப நிலை தகவல், புது தில்லி
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.6
(83.5)
31.8
(89.2)
39.4
(102.9)
43.2
(109.8)
47.2
(117)
45.0
(113)
43.3
(109.9)
41.8
(107.2)
39.2
(102.6)
38.1
(100.6)
33.6
(92.5)
29.1
(84.4)
[[
உயர் சராசரி °C (°F) 21.1
(70)
24.2
(75.6)
30.0
(86)
36.2
(97.2)
39.6
(103.3)
39.3
(102.7)
35.1
(95.2)
33.3
(91.9)
33.9
(93)
32.9
(91.2)
28.3
(82.9)
23.0
(73.4)
31.4
(88.5)
தாழ் சராசரி °C (°F) 7.3
(45.1)
10.1
(50.2)
15.4
(59.7)
21.5
(70.7)
25.9
(78.6)
28.3
(82.9)
26.6
(79.9)
25.9
(78.6)
24.4
(75.9)
19.5
(67.1)
12.8
(55)
8.2
(46.8)
18.8
(65.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) -0.6
(30.9)
1.8
(35.2)
5.3
(41.5)
12.9
(55.2)
15.5
(59.9)
19.9
(67.8)
20.1
(68.2)
21.2
(70.2)
17.3
(63.1)
12.8
(55)
6.8
(44.2)
1.3
(34.3)
[[
மழைப்பொழிவுmm (inches) 20.3
(0.799)
15.0
(0.591)
15.8
(0.622)
6.7
(0.264)
17.5
(0.689)
54.9
(2.161)
231.5
(9.114)
258.7
(10.185)
127.8
(5.031)
36.3
(1.429)
5.0
(0.197)
7.8
(0.307)
797.3
(31.39)
ஈரப்பதம் 63 55 47 34 33 46 70 73 62 52 55 62 54.3
சராசரி மழை நாட்கள் (≥ 1.0mm) 1.7 1.3 1.2 0.9 1.4 3.6 10.0 11.3 5.4 1.6 0.1 0.6 39.1
சூரியஒளி நேரம் 213.9 217.5 238.7 261.0 263.5 198.0 167.4 176.7 219.0 269.7 246.0 217.0 2,688.4
Source #1: WMO,[22] NOAA (extremes and humidity, 1971-1990) [23]
Source #2: HKO (sun only, 1971–1990) [24]
கர்சன் பிரபுவும் அவரது துணைவியாரும் தில்லிப் பேரவைக்கு வருகை புரிதல், 1903
1911 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.
1931 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Lahiri, Tripti (13 January 2012). "New Delhi: One of History’s Best-Kept Secrets". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/. 
  2. "Capital story: Managing a New Delhi". Hindustan Times. 1 September 2011. http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx. 
  3. Stancati, Margherita (8 December 2011). "New Delhi becomes the capital of Independent India". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/. பார்த்த நாள்: 11 December 2011. 
  4. "New Delhi: Journey of its rich heritage (1911–2011)". Aaaj Ki Khabar. பார்த்த நாள் 16 January 2012.
  5. "Lists: Republic of India". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்.
  6. "The Global Cities Index 2010: Top Global Cities of the World". Foreign Policy. பார்த்த நாள் 26 May 2011.
  7. "INDIA STATS : Million plus cities in India as per Census 2011". Press Information Bureau. பார்த்த நாள் 11 April 2013.
  8. The Principal Agglomerations of the World - Population Statistics and Maps
  9. "Mercer Survey: New Delhi most expensive Indian city for expats". Mercer. 14 June 2012. http://www.mercer.com/costoflivingpr#City_rankings. பார்த்த நாள்: 14 June 2012. 
  10. "The World According to GaWC 2010". Globalization and World Cities (GaWC) Study Group and Network. Loughborough University. பார்த்த நாள் 15 September 2011.
  11. "Results Of The Knight Frank Global Cities Survey".
  12. Stephen Legg (22 July 2011). Spaces of Colonialism: Delhi's Urban Governmentalities. John Wiley & Sons. ISBN 978-1-4443-9951-6. http://books.google.com/books?id=nCqc9ALEANkC. பார்த்த நாள்: 2 October 2012. 
  13. Wright, Tom (11 November 2011). "Why Delhi? The Move From Calcutta". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/11/why-delhi-the-move-from-calcutta/. பார்த்த நாள்: 16 November 2011. 
  14. Wright, Tom (22 November 2011). "In 1911, Rush to Name Delhi as Capital Causes a Crush". The Wall Street Journal. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/22/in-1911-rush-to-name-delhi-as-capital-causes-a-crush/. பார்த்த நாள்: 3 December 2011. 
  15. "Was New Delhi a Death Knell for Calcutta?". The Wall Street Journal. 28 November 2011. http://blogs.wsj.com/indiarealtime/2011/11/28/was-new-delhi-a-death-knell-for-calcutta/. பார்த்த நாள்: 3 December 2011. 
  16. Hall, P (2002). Cities of Tomorrow. Blackwell Publishing. பக். 198–206. ISBN 0-631-23252-4. 
  17. Coronation park ஹிந்துஸ்தான் டைம்ஸ், 14 August 2008.
  18. "Yadgaar". தேசிய அருங்காட்சியகம், புது டில்லி. பார்த்த நாள் 18 May 2010.
  19. "Architecture of New Delhi". Apollo (magazine). பார்த்த நாள் 30 January 2012.
  20. "NDMC Act". Ndmc.gov.in. பார்த்த நாள் 4 November 2008.
  21. "Hazard profiles of Indian districts" (PDF). National Capacity Building Project in Disaster Management. UNDP. மூல முகவரியிலிருந்து 16 May 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 August 2006.
  22. "World Weather Information Service - New Delhi". World Meteorological Organisation. பார்த்த நாள் 2011-05-04.
  23. "New Delhi Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்த்த நாள் December 21, 2012.
  24. "Climatological Normals of New Delhi, India". Hong Kong Observatory. பார்த்த நாள் 2011-05-04.
"http://ta.wikipedia.org/w/index.php?title=புது_தில்லி&oldid=1686725" இருந்து மீள்விக்கப்பட்டது