பி. சுந்தரய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பி. சுந்தரய்யா
Sundaraiah park 2.JPG
பொதுச் செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
பதவியில்
1964–1978
பின்வந்தவர் எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்
தனிநபர் தகவல்
பிறப்பு மே 1, 1913(1913-05-01)
நெல்லூர் மாவட்டம்,ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு மே 19, 1985 (அகவை 72)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) லேலா
சமயம் இறைமறுப்பு

பி. சுந்தரய்யா (1 மே 1913 – 19 மே 1985) இந்திய பொதுவுடமை (மார்க்சிஸ்டு) கட்சியின் நிறுவன உறுப்பினரும் , தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். பி. எஸ். என்று மக்களால் நேசத்துடன் அழைக்கப்பட்டார்.[1][2]

பிறப்பு, ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சுந்தரய்யா 1 மே 1913 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் அழகின்படுவில் பிறந்தார் .சிறுவனாக இருந்த போது அவருடைய முதல் பொது நடவடிக்கை என்பது தன்னுடைய கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உண்ணாவிரதம் மேற்கொண்டதாகும். தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்த முதல் கம்யூனிஸ்ட்டான அமீர் ஹைதர் கான் மூலம், கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுவுடைமை இயக்கத்தில்[தொகு]

24 வயது இருக்கும் போதே 1936-ல் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக மாறினார். நாட்டில் கட்சி மத்தியத்துவப்படுத்தப்பட்ட கட்சியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டபின் அமைக்கப்பட்ட முதல் மத்தியக் குழுவாக அதுஇருந்தது. தென்னிந்தியாவில் பொதுவுடமைக் கட்சியைக் கட்டும் பணி அவரிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ‘‘கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு’’ என்ற நூலில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருப்பது போல, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் பிரிவைத் தெரிவு செய்ததில் பி.சுந்தரய்யா முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறார்.

இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)இல் அவரது பணி[தொகு]

1964இல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான ஏழாவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பன்னிரண்டு ஆண்டு காலம் அவர் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். அந்த சமயத்தில் அவர் கட்சியை ஒரு மார்க்சிச - லெனினிச அமைப்பாக உருவாக்குவதற்காகத் தன் சக்தி அனைத்தையும் செலவிட்டார். 1967இல் அக் கட்சியின் மத்தியக் குழுவால் நிறைவேற்றப் பட்ட ‘கட்சி ஸ்தாபனத்தின் பணிகள்’ என்கிற புரட்சிகர அமைப்பிற்கான செயல் திட்டத்தில் அவரது முத்திரையைப் பெற்றிருக்கிறது. பி. சுந்தரய்யா, விவசாயப் புரட்சிக்கான போர்த்தந்திரங்களை வளர்த்தெடுப்பதில் பெருமளவில் பங்களிப்பினைச் செய்திருக் கிறார். 1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டபோது அதன் நிறுவனத் தலைவர்களில் அவரும் ஒருவர். அப் போது அவர் அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற சிறப்பம்சங்கள்[தொகு]

‘‘தெலுங்கானா ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்’’ என்கிற அவரது நூல், தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் குறித்த முழுமையான நூலாகும். கம்யூனிச இயக்கத்திற்குள்ளிருந்த திருத்தல்வாதத்திற்கு எதிராகப் போராடினார். அதேபோன்று அதற்கு இணையாக ‘அதிதீவிர இடதுசாரி’ திரிபுகளுக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பி._சுந்தரய்யா&oldid=1661152" இருந்து மீள்விக்கப்பட்டது