ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த்
Harkishen Singh Surjeet

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த்

பதவியில்
1992-2005
முன்னவர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத்
பின்வந்தவர் பிரகாஷ் காரத்
அரசியல் கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

பிறப்பு மார்ச் 23, 1916(1916-03-23)
ஜலந்தர், பஞ்சாப்
இறப்பு ஆகஸ்ட் 1, 2008 (அகவை 92)
தில்லி
இருப்பிடம் புது தில்லி
சமயம் சீக்கியம்
ஜனவரி 27 இன் படியான தகவல், 2007
மூலம்: [1]

ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த் (Harkishan Singh Surjeet, மார்ச் 23, 1916 - ஆகஸ்ட் 1, 2008) இந்தியாவின் கம்யூனிசத் தலைவர்களில் ஒருவர். மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியின் பொதுச் செயலாளராக 1992 முதல் 2005 வரை பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஜல‌ந்த‌ரி‌ல் உ‌ள்ள ப‌ந்தலா ‌கிராம‌த்‌தி‌ல் ‌பிற‌ந்த ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், தனது இளமை‌ப் பருவ‌த்‌தி‌ல் விடுதலைப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் த‌ன்னை இணை‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.

இந்தியப் பொதுவுடமைக் கட்சியி‌ல் 1936 இ‌ல் இணை‌ந்தா‌ர். ‌பி‌ன்ன‌ர் 28 ஆ‌ண்டுக‌ளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி இர‌ண்டாகப் பிளவடைந்த போது, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியில் சேர்ந்தார்.

13 ஆ‌ண்டுக‌‌ள் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலராக‌ப் ப‌ணியா‌ற்‌றிய சு‌ர்‌ஜீ‌த், ‌தீ‌விர அர‌‌சிய‌லி‌ல் இரு‌ந்து ஒது‌ங்‌கி ஓ‌ய்வு பெ‌ற்றா‌ர்.

1978 முத‌ல் 1984 வரை மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் பத‌வி வ‌கி‌த்த சு‌ர்ஜீ‌த், இர‌ண்டு முறை பஞ்சாப் ச‌ட்ட‌ப் பேரவை உறு‌ப்‌பினராகவு‌ம் இரு‌ந்து‌ள்ளா‌ர் (1953- 57 ம‌ற்று‌ம் 1967- 69).

கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை உ‌ள்‌ளி‌ட்ட‌ப் ப‌‌ல்வேறு ‌விவகார‌ங்க‌ள் தொட‌ர்பாக நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பு‌த்தகக‌ங்களையு‌ம் அவ‌ர் எழு‌தியு‌ள்ளா‌ர்.

சு‌‌ர்‌ஜீத்‌தி‌ன் மனை‌வி ‌பி‌ரீ‌த்த‌ம் கெள‌ர். இவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மக‌ன்களு‌ம் ஒரு மகளு‌ம் உ‌ள்ளன‌ர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nine to none, founders’ era ends in CPM", The Telegraph (Calcutta), April 3, 2008.

வெளி இணைப்புகள்[தொகு]