ராஜீவ் காந்தி படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர், 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்[1].ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது.அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படை மூலம்,சிக்கியிருந்தது.விடுதலை புலிகள் இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஓவியம்

பொருளடக்கம்

படுகொலை விவரம் [தொகு]

இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

தொகு

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது.பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெறியப்பட்டது.

ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்[2].அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார்.அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, அவர் தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாலை அணுவித்தனர்.22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினாள்.அவள் அவரது கால்களை தொட கீழே குனியும் போது அவளது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஷ்(RDX) வெடிபொருளை வெடிக்கச்செய்தாள்.ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடந்து சென்ற பாதை

பாதுகாப்பு குறைபாடு:

உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய புலிகளின் முடிவை அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவேன் என்று 21-28 ஆகஸ்ட், 1990, சன்டே(Sunday) இதழின் பதிப்பில் அவரது பேட்டியில் கூறியதே காரணம் என்றது.அப்போதய தமிழ்நாடு ஆளுநர் பிஷம் நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.

ஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தது என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது[3].

நரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ் எடுக்கப்படவில்லை.

சுப்பிரமணியன் சுவாமி புலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச், 1991 அன்றும் மார்ச், 14 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று எழுதியிருந்தார்[4].

புலனாய்வு [தொகு]

படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை காவல்துறை துணை ஆய்வாளர் ராதா வினோத் ராஜு தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது.

குற்றம் புரிந்தவர் [தொகு]

ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது.பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி என்று தெறியப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு [தொகு]

இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது.தீர்ப்பு மேலும் அக்டோபர் 1987 இல் ஒரு கப்பலில் 12 புலிகளின் தற்கொளைகளையும் , ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் திலீபன் என்பவனின் மரணத்தையும் குறிப்பிடுகிறது.இச்சம்பவம் ராஜிவ் காந்தியைத் தவிர வேறு யாரையும் கொல்லும் நோக்கம் கொண்டதற்கு சான்று இல்லை என்று சுட்டிக்காட்டியது.மேலும் இது அரசை மிரட்டும் நோக்கம் கொண்டதாக தெரியவில்லை என்று கூறி இது ஒரு தீவிரவாத செயல் அல்ல என்று கூறியது.[5] [6] Judge Thomas further states that conspiracy was hatched in stages commencing from 1987 and that it spanned several years. The Special Investigation team of India's premier special investigation agency CBI was not able to pinpoint when the decision to kill Rajiv Gandhi was taken.[6]


விசாரணை [தொகு]

விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது.சென்னையில் நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை அளித்தது.இது இந்தியாவில் ஒரு புயலை உருவாக்கியது. சட்ட வல்லுனர்கள் திகைத்தனர்[7] .மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன[8][9].ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.அனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்[10].உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஆகத்து 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டுள்ளது.இந்தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆகஸ்ட் 30 ,2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நினைவிடம் [தொகு]

மனித வாழ்வின் நெறி கொண்ட ஏழு தூண்கள், ராஜீவ் காந்தி நினைவிடம்

ராஜீவ் காந்தி நினைவிடம் அவ்விடத்தில் கட்டப்பட்டு இன்று சிறு தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்துவருகிறது.

"மிஷன் 90 டேஸ்"(Mission 90 Days) என்ற திரைப்படம் இச்சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் [தொகு]

ராஜீவ் காந்தி படுகொலை - செய்திக்கட்டுரை

ராஜீவ் காந்தி படுகொலை(ஆங்கிலம்)

பிபிசி செய்திக்கட்டுரை

தினமலர் செய்தி

குறிப்புகள் [தொகு]


வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_காந்தி_படுகொலை&oldid=1344571" இருந்து மீள்விக்கப்பட்டது