ப. சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ப. சதாசிவம்


பதவியில்
சூலை 19, 2013 – ஏப்ரல் 25, 2014
நியமனம்
வழங்கியவர்
பிரணப் முக்கர்ஜி
முன்னவர் அல்தமஸ் கபீர்
பின்வந்தவர் ஆர். எம். லோதா

பிறப்பு ஏப்ரல் 27, 1949 (1949-04-27) (அகவை 65)
காடப்பநல்லூர், பவானி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
பயின்ற கல்விசாலை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

ப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் இந்தியத் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்.[1][2] இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாக சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.[3][4]

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாக கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரை சேர்ந்த நீதிபதி பதஞ்ஜலி சாஸ்திரி இந்தியத் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

இளமைப் பருவம் மற்றும் கல்வி[தொகு]

இவர் ஈரோடு மாவட்டம், பவானி, காடப்பநல்லூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பழனிச்சாமி கவுண்டர், தாயார் பெயர் நாச்சியம்மாள்[5].சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் முடித்தார்.[6]

தொழில்[தொகு]

சனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகசுடு 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவில்லை.[3]

இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒரியாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகித்தானிய அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.[3] பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார். [7]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ப._சதாசிவம்&oldid=1654102" இருந்து மீள்விக்கப்பட்டது