ப. சதாசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. சதாசிவம்
கேரள ஆளுநர்
பதவியில்
31 ஆகத்து 2014 – 05 செப்டம்பர் 2019
நியமிப்புபிரணப் முகர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்சீலா தீக்‌சித்
பின்னவர்ஆரிப் முகமது கான்
இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
19 சூலை 2013 – 26 ஏப்ரல் 2014
நியமிப்புபிரணப் முகர்ஜி
இந்தியக் குடியரசுத் தலைவர்
முன்னையவர்அல்தமஸ் கபீர்
பின்னவர்ஆர். எம். லோதா
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
20 ஏப்ரல் 2007 – 8 செப்டம்பர் 2007
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 27, 1949 (1949-04-27) (அகவை 74)
காடப்பநல்லூர், பவானி, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
முன்னாள் கல்லூரிடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

ப. சதாசிவம் அல்லது பி. சதாசிவம் முன்னாள் கேரள ஆளுநராவார். முன்னதாக இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.[1][2] இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.[3][4] தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரை சேர்ந்த நீதிபதி பதஞ்ஜலி சாஸ்திரி இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.ஆகத்து , 2014இல் கேரள மாநில ஆளுநராக இருந்த சீலா தீக்‌சித் தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.[5] இந்திய வரலாற்றில் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை .[6]

இளமைப் பருவம் மற்றும் கல்வி[தொகு]

இவர் ஈரோடு மாவட்டம், பவானி, காடப்பநல்லூர் கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பெயர் பழனிச்சாமி, தாயார் பெயர் நாச்சியம்மாள்[7].சிங்கம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற இவர் சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் முடித்தார்.[8]

தொழில்[தொகு]

சனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை.[3]

இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒரியாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகித்தானிய அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.[3] பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.[9]

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள்குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கட்ட ஓர் ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர்.

வழங்கிய முக்கியத் தீர்ப்புகள்[தொகு]

  • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.
  • ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாதெனத் தீர்ப்பளித்தது.
  • ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியது.
  • உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றபிறகு, தேங்கியுள்ள வழக்குகளைக் குறைக்க நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடத்தி லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம் உள்பட 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. காடப்பநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம் பரணிடப்பட்டது 2013-07-01 at the வந்தவழி இயந்திரம், தினகரன் நாளிதழ்
  2. தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து, தினமணி நாளிதழ்
  3. 3.0 3.1 3.2 Justice P Sathasivam to be 40th Chief Justice of India; first CJI from Tamilnadu
  4. மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம், தினமணி
  5. "கேரள மாநில ஆளுநராக பி.சதாசிவம் நியமனம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 4 செப்டம்பர் 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. Venkatesan, J. (30 Aug 2014). "Former CJI Sathasivam to be Kerala Governor". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/former-cji-sathasivam-to-be-kerala-governor/article6365390.ece. பார்த்த நாள்: 31 Aug 2014. 
  7. "விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம்". Archived from the original on 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.
  8. "P. Sathasivam to be New Chief Justice of India". news.outlookindia.com. Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-07-01.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சதாசிவம்&oldid=3713837" இலிருந்து மீள்விக்கப்பட்டது