தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984
| ‹ 1980 |
||||
| தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 | ||||
|---|---|---|---|---|
| தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | ||||
| டிசம்பர் 24, 1984 | ||||
| முதல் கட்சி | இரண்டாம் கட்சி | |||
| தலைவர் | எம். ஜி. ராமச்சந்திரன் | மு. கருணாநிதி | ||
| கட்சி | அதிமுக | திமுக | ||
| கூட்டணி | அதிமுக | திமுக | ||
| தலைவரின் தொகுதி | ஆண்டிப்பட்டி | போட்டியிடவில்லை | ||
| வென்ற தொகுதிகள் | 195 | 34 | ||
| மாற்றம் | +29 | -23 | ||
| மொத்த வாக்குகள் | 11,681,221 | 8,021,293 | ||
| விழுக்காடு | 53.87% | 37.00% | ||
| மாற்றம் | +4.95% | -7.43% | ||
தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
பொருளடக்கம் |
தொகுதிகள் [தொகு]
1984 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
கட்சிகள் [தொகு]
1977 முதல் எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்டு வந்த அதிமுகவுடன் இந்திரா காங்கிரசும் காந்தி காமராஜ் காங்கிரசும் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிட்டன. திமுக தலைமையில் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர அம்பேத்கார் க்ராந்தி தளம், பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு (ஜே), தமிழ் நாடு காங்கிரசு போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டன.[2][3]
அரசியல் நிலவரம் [தொகு]
1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரக கோளாறு காரணமாக உடல் நிலை குன்றியிருந்த எம்ஜியாருக்கு ஆதாரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன. 1983 இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தன. எம்ஜியார் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம. வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார். அதிமுக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எம்ஜியார் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் காட்சிகள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் திரையிடப்படடன. இத்தேர்தலின் போதே ”எம்.ஜி.ஆர் ஃபார்முலா” என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிக்கு (காங்கிரசு) 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு (அதிமுக) 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.[2][3]
தேர்தல் முடிவுகள் [தொகு]
தேர்தல் தேதி – 24 டிசம்பர் 1984; மொத்தம் 73.47 % வாக்குகள் பதிவாகின.[4]
| கூட்டணி | கட்சி | வாக்குகள் | வாக்கு % | போட்டியிட்ட இடங்கள் | வென்ற இடங்கள் | மாற்றம் |
|---|---|---|---|---|---|---|
| அதிமுக இடங்கள்: 195 மாற்றம்: +29 வாக்குகள்: 11,681,221 வாக்கு %: 53.87% |
அதிமுக | 8,030,809 | 37.03% | 155 | 132 | +3 |
| காங்கிரசு | 3,529,708 | 16.28% | 73 | 61 | +30 | |
| காந்தி காமராஜ் காங்கிரசு | 120,704 | 0.56% | 4 | 2 | -4 | |
| திமுக இடங்கள்: 34 மாற்றம்: -23 வாக்குகள்: 8,021,293 வாக்கு %: 37.00% |
திமுக | 6,362,770 | 29.34% | 167 | 24 | -13 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 597,622 | 2.76% | 16 | 5 | -6 | |
| ஜனதா கட்சி | 493,374 | 2.28% | 16 | 3 | +3 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | 567,527 | 2.62% | 17 | 2 | -7 | |
| மற்றவர்கள் Seats: 3 மாற்றம்: -8 |
சுயேட்சைகள் | 1,619,921 | 7.47% | 994 | 4 | -4 |
| அம்பேத்கர் க்ராந்தி தளம் | 47,212 | 0.22% | 1 | 1 | — | |
| தமிழ்நாடு காங்கிரசு (கே) | 152,315 | 0.70% | 5 | 0 | — | |
| காங்கிரசு (ஜெ) | 110,121 | 0.51% | 36 | 0 | — | |
| பாரதீய ஜனதா கட்சி | 54,390 | 0.25% | 15 | 0 | — | |
| மொத்தம் | 11 கட்சிகள் | 21,686,473 | 100% | — | 234 | — |
ஆட்சி அமைப்பு [தொகு]
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழ்க முதல்வராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
- ↑ 2.0 2.1 G. Palanithurai (June 1991). Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu. Stosius Inc/Advent Books Division. pp. 27. ISBN 8122002277.
- ↑ 3.0 3.1 K. Mohandas (1992). MGR, the man and the myth. Panther Publishers. pp. 105–106. ISBN 978-8185457093.
- ↑ 1984 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
வெளியிணைப்பு [தொகு]
1984 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
|
|||||||||||||||||