தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1971 இந்தியாவின் கொடி 1980
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
ஜூன் 10, 1977
முதல் கட்சி இரண்டாம் கட்சி
Flag of a tamil nadu political party.svg Flag DMK.jpg
தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
தலைவரின் தொகுதி அருப்புக்கோட்டை அண்ணா நகர்
வென்ற தொகுதிகள் 144 48
மாற்றம் n/a -136
மொத்த வாக்குகள் 5,734,692 4,258,771
விழுக்காடு 33.52% 24.89%
மாற்றம் n/a -23.69%
மூன்றாம் கட்சி நான்காம் கட்சி
1931 Flag of India.svg Janata Party 300.jpg
தலைவர் ஜி. கே. மூப்பனார் பி. ராமச்சந்திரன்
கட்சி காங்கிரசு ஜனதா கட்சி
தலைவரின் தொகுதி போட்டியிடவில்லை போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 32 10
மாற்றம் n/a n/a
பெற்ற வாக்குகள் 3,491,390 2,851,884
விழுக்காடு 20.40% 16.67%
மாற்றம் n/a n/a

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்
குடியரசுத் தலைவர் ஆட்சி

தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்

தொகுதிகள்[தொகு]

1977 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

கட்சிகள்[தொகு]

1967 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாத்துரை இரண்டாடுகளுக்குள் 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவில் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். 1971 தேர்தலில் மீண்டும் திமுக வென்று கருணாநிதி இரண்டாம் முறை முதல்வரானார். 1972 இல் திமுக பிளவு பட்டது. எம். ஜி. ஆர் கட்சியைவிட்டு வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுகட்சியைத் தொடங்கினார். 1976 இல் காமராஜர் மறைவிற்குப் பின் அவரது நிறுவன காங்கிரசு நிலை குலைந்தது. ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் இந்திரா காங்கிரசுடன் இணைந்தனர். மற்றொரு பிரிவினர் ஜனதா கட்சியில் இணைந்தனர். காமராஜர் உயிருடன் இருந்த வரை தமிழகத்தில் காலூன்ற முடியாத இந்திரா காங்கிரசு அவரது மறைவுக்குப் பின்னர் வலுவடைந்த்து. 1972 இல் ராஜகோபாலாச்சாரி இறந்த பிறகு அவரது சுதந்திராக் கட்சியும் செயல்படுவது நின்று போனது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2][3][4][5][6][7]

அரசியல் நிலவரம்[தொகு]

கே. ஏ. மதியழகனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் எம். ஜி. ஆர்

திமுகவின் ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டிற்கு முன்னரே கருணாநிதியின் திமுக அரசு இந்திரா காந்தியின் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதால் 1976 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய தேர்தல் ஒராண்டு தள்ளிப்போடப்பட்டது. திமுக அரசு அதன் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருந்தது. அதிமுக பல இடைத்தேர்தல்களில் வென்றிருந்தது. சத்தியவாணி முத்து, இரா. நெடுஞ்செழியன், எஸ் மாதவன் போன்ற திமுக தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி இருந்தனர். அதிமுக-இந்திரா காங்கிரசு கூட்டணி, 1977 ஜனவரி மாதம் நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக-ஜனதா தளம் கூட்டணி தோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்குள் கூட்டணிகள் மாறின. சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி காணப்பட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்டு ப்ளாக், முஸ்லீம் லீக் ஓரணியாகவும், இந்திரா காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஓரணியாகவும் போட்டியிட்டன. திமுகவும் ஜனதா தளமும் தனித்து போட்டியிட்டன.[2][3][5][8]

தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் தேதி – 10 ஜூன் 1977 ; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[9]

அதிமுக இடங்கள் திமுக இடங்கள் காங்கிரசு இடங்கள் ஜனதா இடங்கள்
அதிமுக 130 திமுக 48 காங்கிரசு 27 ஜனதா கட்சி 10
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 12 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5
ஃபார்வார்ட் ப்ளாக் 1
சுயேட்சை (முஸ்லிம் லீக்) 1
மொத்தம் (1977) 144 மொத்தம் (1977) 48 மொத்தம் (1977) 32 மொத்தம் (1977) 10
மொத்தம் (1971) n/a மொத்தம் (1971) 184 மொத்தம் (1971) 35 மொத்தம் (1971) n/a

ஆட்சி அமைப்பு[தொகு]

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வரானார். அடுத்த பன்னிரெண்டாண்டுகளுக்கு அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
  2. 2.0 2.1 Duncan Forrester (1976). "Factions and Filmstars: Tamil Nadu Politics since 1971". Asian Survey 16 (3): 283–296. http://www.jstor.org/stable/2643545. 
  3. 3.0 3.1 G.G. Mirchandani. 320 Million Judges. Abhinav publications. பக். 124–126. ISBN 817017013. 
  4. "G.K. Moopanar passes away". தி இந்து (31 August 2001). பார்த்த நாள் 15 February 2010.
  5. 5.0 5.1 Atul Kohli (1990). Democracy and discontent: India's growing crisis of governability. Cambridge University Press. பக். 166–167. ISBN 052139161. 
  6. Sanjeev Sabhlok (2008). Breaking free of Nehru: let's unleash India!. Anthem Press. பக். 33. 
  7. Ramakrishnan, T. (25 December 2007). "Remembering a phenomenon". தி இந்து. பார்த்த நாள் 15 February 2010.
  8. "Moment of Truth for MGR". Economic and Political Weekly (Economic and Political Weekly) 15 (4): 141–142. 26 January 1980. http://www.jstor.org/pss/4368350. பார்த்த நாள்: 15 February 2010. 
  9. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009