இரா. நெடுஞ்செழியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரா. நெடுஞ்செழியன்


பதவியில்
1967-1976,1977-1988,1991-1996

தொகுதி ஆத்தூர்
அரசியல் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
கட்சி பொறுப்பு அவைத் தலைவர்

பிறப்பு சூலை 11, 1920(1920-07-11)
திருக்கனாபுரம், பட்டுக்கோட்டை
கல்வி முதுகலைமானி தமிழ்
இறப்பு சனவரி 12 2000 (அகவை 79)
சென்னை
வாழ்க்கைத்
துணை
விசாலாக்சி
பிள்ளைகள் அறிவழகன்
இருப்பிடம் சென்னை

இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதி ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி விளங்கினார். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.

[தொகு] குடும்பம்

பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ந்தேதி பிறந்தார். இவருக்கு விசாலாக்சி என்ற மனைவியும், அறிவழகன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார்.

[தொகு] அரசியல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944] ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் துவக்கத்தில் இருந்து பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு பின்பு கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடுகள் காரணமாக அ.தி.மு.க.வில் இணைந்து எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இறுதியில் 12-1-2000ல் காலமானார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இரா._நெடுஞ்செழியன்&oldid=1054280" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்