அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 21. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ளது. புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்[தொகு]

சென்னை மாநகராட்சி வார்டு எண் 66 முதல் 70 வரை மற்றும் 73 முதல் 75 வரை.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2011 எஸ்.கோகுலஇந்திரா அதிமுக
2006 ஆற்காடு வீராசாமி திமுக 46.20
2001 ஆற்காடு வீராசாமி திமுக 48.20
1996 ஆற்காடு வீராசாமி திமுக 67.05
1991 A. செல்லகுமார் இ.தே.காங்கிரசு 57.29
1989 க. அன்பழகன் திமுக 49.94
1984 S. M. இராமச்சந்திரன் திமுக 52.59
1980 மு. கருணாநிதி திமுக 48.97
1977 மு. கருணாநிதி திமுக 50.10

இவற்றையும் பார்க்கவும்[தொகு]