கரூர் (சட்டமன்றத் தொகுதி)
கரூர் சட்டமன்ற தொகுதி 194257 [1] வாக்காளர்களை கொண்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். கரூர் மாவட்டத்தின் தலைமை தொகுதியாததாலும், மாவட்டத்தின் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாகவும் இருக்கும் காரணத்தினால் இது முக்கியத்தொகுதியாக விளங்குகிறது.தமிழக சட்டமன்ற தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 152ம் வரிசை எண்ணுக்குறிய தொகுதி ஆகும். 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 83.63 சதவீத வாக்குகளை பதிவு செய்த இத்தொகுதி தமிழகத்திலேயே அதிக மக்கள் வாக்களித்த தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
இத்தொகுதி 1952ம் ஆண்டு தேர்தலிலேயே உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும்.
அமைவிடம் [தொகு]
கரூர் தொகுதியின் கிழக்கே தொட்டியம் ,கிருஸ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், மேற்கே அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், வடக்கே கபிலர் மலை, நாமக்கல் ஆகிய தொகுதிகளும், தெற்கே குளித்தலை, கிருஸ்ணராயபுரம் தொகுதிகளும் அமைந்துள்ளன.
தொகுதி எல்லைகள் [தொகு]
- கரூர் தாலுக்கா (பகுதி)
நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெருர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள்,
இனாம்கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி).
வாக்காளர்கள் [தொகு]
1,94,257 வாக்காளர்களை கொண்ட இத்தொகுதியிது. 2011ஆம் ஏப்ரல் மாத கணக்கின்படி ஆண் வேட்பாளர்கள் 94,805 பேரும் பெண் வேட்பாளர்கள் 99,404 பேரும் மொத்தம் 1,94,257 வாக்காளர்களை கொண்டு மாவட்டத்தில் பெரியத்தொகுதியாக உள்ளது.
வெற்றிபெற்றோர் விபரம் [தொகு]
சென்னை மாநிலம் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1952 | T. V. சன்னாசி மற்றும் M. மாணிக்கசுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் சுயேச்சை | 29429 மற்றும் 21113 | தகவல் இல்லை | தகவல் இல்லை | தகவல் இல்லை | தகவல் இல்லை | தகவல் இல்லை |
| 1957 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 31611 | 59.86 | K. S. ராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10576 | 20.02 |
| 1962 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 35969 | 51.01 | K. S. ராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 20160 | 28.59 |
| 1967 | T. M. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 33552 | 43.41 | S. நல்லசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 28677 | 37.10 |
தமிழ்நாடு [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | நல்லசாமி | திமுக | 45977 | 56.55 | T. M. நல்லசாமி | ஸ்தாபன காங்கிரஸ் | 35230 | 43.44 |
| 1977 | K. வடிவேல் | அதிமுக | 33856 | 35.11 | S. நல்லசாமி | திமுக | 22264 | 23.08 |
| 1980 | M. சின்னசாமி | அதிமுக | 54331 | 51.07 | S. நல்லசாமி | திமுக | 46025 | 43.02 |
| 1984 | K. வடிவேல் | அதிமுக | 65363 | 54.35 | K. V. ராமசாமி | திமுக | 53160 | 44.20 |
| 1989 | K. V. ராமசாமி | திமுக | 54163 | 38.34 | M. சின்னசாமி | அதிமுக(ஜெயலலிதா அணி) | 49661 | 35.51 |
| 1991 | M. சின்னசாமி | அதிமுக | 89351 | 64.69 | வாசுகி முருகேசன் | திமுக | 45259 | 32.76 |
| 1996 | வாசுகி முருகேசன் | திமுக | 79302 | 53.87 | M. சின்னசாமி | அதிமுக | 47294 | 32.12 |
| 2001 | T. N. சிவசுப்பிரமணியன் | இந்திய தேசிய காங்கிரசு | 82012 | 53.35 | வாசுகி முருகேசன் | திமுக | 58574 | 38.11 |
| 2006 | V. செந்தில் பாலாஜி | அதிமுக | 80214 | 46.99 | வாசுகி முருகேசன் | திமுக | 74830 | 43.84 |
| 2011 | V. செந்தில் பாலாஜி | அதிமுக | 99738 | 61.18 | ஜோதிமணி | இந்திய தேசிய காங்கிரசு | 55593 | 34.09 |
2011 தேர்தல் நிலவரம் [தொகு]
| பெயர் | கட்சி | பெற்ற வாக்குகள் | சதவிகிதம் |
|---|---|---|---|
| செந்தில் பாலாஜி | அதிமுக | 99738 | 61.18 |
| ஜோதிமணி | இந்திய தேசிய காங்கிரசு | 55593 | 34.09 |
| சிவமணி. S | பாஜக | 2417 | 1.48 |
| அசோக்குமார். B | 681 | 0.42 | |
| ஆதிகிருசுணன். P | பகுஜன் சமாஜ் கட்சி | 1396 | 0.82 |
| லோகநாதன் | சுயேட்சை | 610 | 0.38 |