இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
இராசிபுரம் (தனி) நாமக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
ராசிபுரம் வட்டம் (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.
வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | டி. எம். காளியண்ணன் | காங்கிரசு | 18553 | 42.02 | கே. இராமசாமி | சுயேச்சை | 10189 | 23.08 |
| 1957 | எ. இராஜா கவுண்டர் | காங்கிரசு | 20983 | 54.46 | கே. வி. கே. இராமசாமி | சுயேச்சை | 17545 | 45.54 |
| 1962 | என். பி. செங்கோட்டுவேல் | திமுக | 26846 | 49.21 | முத்துசாமி கவுண்டர் | காங்கிரசு | 26776 | 49.08 |
| 1967 | பி. பெரியசாமி | திமுக | 38402 | 52.53 | கே எம். கவுண்டர் | காங்கிரசு | 30873 | 42.23 |
| 1971 | ஆர். நைனாமலை | திமுக | 41079 | 54.90 | பி. கணபதி | காங்கிரசு (ஸ்தாபன) | 31161 | 41.64 |
| 1977 | பி. துரைசாமி | அதிமுக | 33762 | 43.61 | கே. சி. பெரியசாமி | திமுக | 19374 | 25.02 |
| 1980 | கே. பி. இராமலிங்கம் | அதிமுக | 49779 | 58.25 | பி. டி. முத்து | திமுக | 34175 | 39.99 |
| 1984 | கே. பி. இராமலிங்கம் | அதிமுக | 51565 | 52.45 | பி. காளியப்பன் | திமுக | 41087 | 41.79 |
| 1989 * | எ. சுப்பு | திமுக | 39534 | 35.75 | வி. தமிழரசு | அதிமுக (ஜெ) | 39074 | 35.33 |
| 1991 | கே. பழனியம்மாள் | அதிமுக | 75855 | 72.15 | பி. எ. ஆர். இளங்கோவன் | திமுக | 25625 | 24.37 |
| 1996 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 42294 | 37.93 | ஆர். ஆர். தமயந்தி | திமுக | 41840 | 37.52 |
| 2001 | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 67332 | 57.48 | கே. பி. இராமலிங்கம் | திமுக | 44303 | 37.82 |
| 2006 ** | கே. பி. இராமசாமி | திமுக | 62629 | -- | பி. ஆர். சுந்தரம் | அதிமுக | 57660 | -- |
| 2011 | ப. தனபால் | அதிமுக | 90186 | --. | வி.பி. துரைசாமி | திமுக | 65469 | -- |
1989ல் ஜானகி பிரிவை சார்ந்த கே. பி. இராமலிங்கம் 16855(15.24%) வாக்குகளும் காங்கிரசின் வி. சுந்தரம் 11157 (10.09%) வாக்குகளும் பெற்றனர்.
1996ல் சுயேச்சையாக போட்டியிட்ட எ. கே. பி. சின்ராஜ் 23161 (20.77%) வாக்குகள் பெற்றார்.
2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் ஆர். இராஜாகவுண்டர் 11992 வாக்குகள் பெற்றார்.