தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைமாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] தொகுதியில் அடங்கிய பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137.
[தொகு] தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 2006 | V.P.கலைராசன் | அதிமுக | 48.57 |
| 2001 | J. அன்பழகன் | திமுக | 48.55 |
| 1996 | A. செல்லகுமார் | த.மா.கா | 67.16 |
| 1991 | S. செயகுமார் | அதிமுக | 61.19 |
| 1989 | S. A. கணேசன் | திமுக | 43.03 |
| 1984 | K. சௌரிராஜன் | இ.தே.காங்கிரசு | 49.26 |
| 1980 | K. சௌரிராஜன் | கா.கா.காங்கிரசு | 50.58 |
| 1977 | R.E. சந்திரன் ஜெயபால் | திமுக | 30.91 |