தென் சென்னை மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இதுவரை தென் சென்னை தொகுதியில் இருந்து வந்த சட்டசபைத் தொகுதிகள் - தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம்.

பேரறிஞர் அண்ணா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, முரசொலி மாறன்,
இரா. வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா பாலி, த.இரா. பாலு ஆகிய புகழ் பெற்றவர்கள் வென்ற தொகுதி இது.

தென் சென்னை தொகுதி திமுக வசம் அதிக முறை இருந்துள்ளது. மொத்தம் 7 முறை திமுக வென்றுள்ளது. அடுத்தபடியாக இதை காங்கிரசு 5 முறை கைப்பற்றியுள்ளது. இங்கு அதிமுகவுக்கு இரண்டு முறை வெற்றி கிடைத்துள்ளது.

பொருளடக்கம்

தொகுதி மறு சீரமைப்பு [தொகு]

தொகுதி மறு சீரமைப்புக்கு பின் இத்தொகுதியில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகியவை புதிய தொகுதிகள் ஆகும்.

இங்கு வென்றவர்கள் [தொகு]

14வது மக்களவை தேர்தல் முடிவு [தொகு]

த.இரா. பாலு (திமுக) - 5,64,578.

பதர் சயீத் (அதிமுக) - 3,43,838.

வெற்றி வேறுபாடு - 2,20,740 வாக்குகள்.

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]

43 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் சி. இராஜேந்திரன் திமுகவின் பாரதியை 33,935 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. இராஜேந்திரன் அதிமுக 308,567
பாரதி திமுக 275,632
வி. கோபிநாத் தேமுதிக 67,291
இல. கணேசன் பாசக 42,925
சரத்பாபு சுயேச்சை 15,885
இராமசாமி @ டராபிக் இராமசாமி சுயேச்சை 1693