நீலகிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலகிரி மாவட்ட வரைபடம்

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.

பொருளடக்கம்

[தொகு] மக்கள்

2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 7,62,141. கல்வியறிவு 81.44%. இது தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டங்களுள் ஒன்று.

இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். தோடர் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர பணியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரும் உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில் கோத்தர் எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர்.இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.

[தொகு] உள் கட்டமைப்பு

நீலகிரி மாவட்டத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடர்வண்டிப் பாதையும் உள்ளது. பற்சக்கர முறையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக நீலகிரி மலை இரயில் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாட்டத்தில் எட்டு இடங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

  1. குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
  2. பைக்காரா ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்

14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
உதகமண்டலம் புத்தி சந்திரன் அதிமுக
கூடலூர் எஸ். செல்வராஜ் தேமுதிக
குன்னூர் கா. ராமச்சந்திரன் திமுக

[தொகு] வெளி இணைப்புகள்



"http://ta.wikipedia.org/w/index.php?title=நீலகிரி_மாவட்டம்&oldid=1105505" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்