தொட்டபெட்டா
| தொட்டபெட்டா | |
|---|---|
தொட்டபெட்டா |
|
| உயரம் | 2,636 மீ (8,648 அடி) |
| இட அமைவு | |
| தொட்டபெட்டா, மேற்குத் தொடர்ச்சி மலை | |
| இட அமைவு | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு |
| மலைத் தொடர் | நீலகிரி |
| ஆயக்கூறுகள் | அமைவு: |
| ஏற்றம் | |
| எளிதாக ஏறும் வழி | தொட்டபெட்டா சாலை |
தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.
தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
8ஆம் பத்து பாடல் 71 தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. கண்டீரக்கோப் பெருநற் கிள்ளி இந்த மலையின் அரசன். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன். [1]
'நளிமலை' என்னும் பெயரிலுள்ள 'நளி' என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். பெருமையை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குகிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது [2]
எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் என்று ஒரு பெண் குறிப்பிடுகிறாள். தோட்டி என்பது ஒரு கருவி. தொரட்டு, அங்குசம் ஆகிய கருவிகளைக் குறிக்கும். அவள் கையைத் தொரட்டு போல் வளைத்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தானாம். [3]
படங்கள் [தொகு]
-
Nilgiri Hills from atop Doddabetta
-
தொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் தோற்றம்