காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு
காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இடையேலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] நீர்ப்பங்கீட்டு அட்டவணை
| கர்நாடகா | தமிழ்நாடு | கேரளம் | புதுச்சேரி | Total | |
|---|---|---|---|---|---|
| நீர் பிடிப்பு பகுதி (in km²)[1] | 34,273 (42%) | 44,016 (54%) | 2,866 (3.5%) | 148(-) | 81,155 |
| வறண்ட பகுதி (in km²) [2] | 21,870 (63.8%) | 12,790 (29.2%) | -- | -- | 34,660 |
| மாநிலத்தின் பங்களிப்பு (கர்நாடகா) (in billion ft³)[3] | 425 (53.7%) | 252 (31.8%) | 113 (14.3%) | 790 | |
| மாநிலத்தின் பங்களிப்பு (தமிழ்நாடு)(in billion ft³)[3][4] | 392 (52.9%) | 222 (30%) | 126 (17%) | 740 | |
| மாநிலங்கள் கோரும் அளவு[சான்று தேவை] | 465 (41%) | 566 (50%) | 100 (9%) | 9.3 (1%) | 1140.3 |
| மாநிலங்கள் கோரும் அளவு (தமிழ்நாட்டின் படி )[சான்று தேவை] | 177 (24%) | 566 (76%) | 5 (1%) | - | 748 |
| ஆற்று நீர் ஆணயம் நிர்ணயித்த அளவு 2007 [5] | 270 (37%) | 419 (58%) | 30 (4%) | 7 (1%) | 726 |
[தொகு] வரலாறு
இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.
1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து., மைசூர் அரசு நடுவண் அரசிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றது. மத்திய அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.
மைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரித்தானிய அரசு 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம்
"இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வைத் தர முடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்"
என கிரிஃபின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.[6]
[தொகு] புதிய ஒப்பந்தம் 1924
கிரிஃபின் கூறியதைச் சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல்முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடை முறையில் இருக்குமென்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட சில துணை ஒப்பந்தங்களின் படி, 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணைத் திட்டத்தையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணைத் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு காவிரிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது.
[தொகு] உண்மை அறியும் குழு
மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்களுக்கு ஒரு சுணக்கமான முடிவெடுக்க 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு "காவிரி உண்மை அறியும் குழு" ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 1972இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கிக்கொண்டன.
[தொகு] காவிரி நடுவர் மன்றம்
இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. 44 நடுத்தர ஆறுகளுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஆற்று நீரைப் பங்கீடு செய்வதில் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.
அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262 -இன்படி மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டது. காவிரிப் பிரச்சினை போலவே மேலும் பல நீர்ச் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா ஆற்றுநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மேலும், கோதாவரி, நர்மதா முதலிய ஆறுகளின் நீரைப் பங்கிடுவதிலும் சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை. பல ஆண்டுகள் சென்ற பிறகு மத்திய அரசு காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-ல் 'காவிரி நடுவர் மன்றம்' அமைத்தது.[7][8]
[தொகு] தீர்ப்பு
1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. ஆனால் இதுவரை கர்நாடகா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில் பிப்ரவரி 5, 2007-ஆம்நாள் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக்கொண்ட, ஐந்து தொகுதிகளையும் (வால்யூம்கள்) கொண்ட அத்தீர்ப்பில்,[9] தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள்³ (12 கி. மீ.³) அளவு காவிரி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் அடிகள்³ (7.6 கி. மீ³) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பான்டிச்சேரி (புதுச்சேரி) ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு, வெறும் 192 பில்லியன் அடிகள்³ (5.4 கி. மீ.³) அளவு தண்ணீரை வழங்கியது. மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது. மேலும், கேரள மாநிலத்திற்கு 30 பில்லியன் அடிகள்³ மற்றும் பான்டிச்சேரிக்கு 7 பில்லியன் அடிகள்³ அளவு வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனிச் செயலற்றுப்போகும்.[10]
[தொகு] மேல் முறையீடு
பாதிக்கப்பட்டதாகக் கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்நாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப்போவதாக அறிவித்தன. அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டுக்குள் நடுவர் மன்றம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட போதும், கர்நாடகம் இத்தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை, அதனால் மேல்முறையீடு செய்தது.
[தொகு] அரசாணை
2007ல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இத்தீர்ப்பு நடுவண் அரசின் அரசாணையில் இடம் பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நடுவண் அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது. [11]
[தொகு] வெளி இணைப்புகள்
- cauvery.com
- கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சகம்
- [1]
- இந்திய நீர்பாசனத்துறை அமைச்சகம்
- தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்
- [2]
- http://maalaithendral.blogspot.com/2007/08/blog-post.html
- http://tamil.oneindia.in/topic/cauvery-issue
- http://www.kalachuvadu.com/issue-87/kaviri01.htm
[தொகு] குறிப்புகள்
- ↑ National Commission For The Reviews Of Working Of The Constitution
- ↑ P. B. Anand. "Water and identity - An analysis of the Cauvery river water dispute." (PDF). University of Bradford. பார்த்த நாள் 2007-08-13.
- ↑ 3.0 3.1 http://www.austlii.edu.au/~andrew/CommonLII/INSC/1991/305.html
- ↑ Cauvery: Nariman to continue as State counsel - Newindpress.com
- ↑ "Cauvery tribunal gives TN 419 tmcft, 270 to Karnataka". Rediff.com. பார்த்த நாள் 2007-08-13.
- ↑ http://www.kalachuvadu.com/issue-87/kaviri01.htm
- ↑ name="pdf"
- ↑ name="Hindu">"State keenly awaiting Cauvery tribunal award". The Hindu (Chennai, India). 29 December 2003. http://www.hindu.com/2003/12/29/stories/2003122906950400.htm.
- ↑ NDTV.com: Latest News, e-Bulletins, Stocks, Bollywood, Cricket, Video, Blogs, RSS from India
- ↑ NDTV.com: Latest News, e-Bulletins, Stocks, Bollywood, Cricket, Video, Blogs, RSS from India
- ↑ http://newindianexpress.com/states/tamil_nadu/article1472920.ece நடுவண் அரசின் அரசாணை
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |