சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சேலம் ஆகும்.
இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
[தொகு] நிர்வாகம்
இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:
மலைகள்:
சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு
- சேர்வராயன் மலை
- கஞ்சமலை
- ஜெரகமலை
- கொடுமலை
- கல்ராயன் மலை
- பச்சைமலை
- மேட்டுர் மலை
- நகரமலை
ஆறுகள்:
- காவிரி
- திருமணிமுத்தாறு
- வஷிஷ்டநதி
[தொகு] சமயம்
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 3,016,346 | 100% |
| இந்துகள் | 2,883,909 | 95.60% |
| இசுலாமியர் | 77,648 | 2.57% |
| கிறித்தவர் | 50,450 | 1.67% |
| சீக்கியர் | 535 | 0.017% |
| பௌத்தர் | 208 | 0.006% |
| சமணர் | 1,043 | 0.034% |
| ஏனைய | 248 | 0.008% |
| குறிப்பிடாதோர் | 1,248 | 0.041% |
[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றம்/15/சேலம்
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||||||||
|
||||||||||||||||||||