தோடர்
தோடர்கள் தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர். [1] இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.
பொருளடக்கம் |
[தொகு] தோடர்கள் பண்பாடும் பழக்கவழக்கங்களும்
தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.
[தொகு] மண உறவு
இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] உசாத்துணை
- அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.
- முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998
[தொகு] மேற்கோள்கள்
- ↑ ., சு. சக்திவேல் (1998). தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.