நாவல் (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாவல்
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: மிர்த்தாலேஸ்
குடும்பம்: மிர்த்தாசியே
பேரினம்: சிசிஜியம்
இனம்: சி. கியூமினி
இருசொற்பெயர்
சிசிஜியம் கியூமினி
(L.) Skeels.

நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.

பொருளடக்கம்

[தொகு] பெயர் விளக்கம்

நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம்.

[தொகு] சங்கநூல்

சங்கநூல்கள் இந்தியாவை 'நாவலந் தண்பொழில்' எனக் குறிப்பிடுகின்றன. [1]

[தொகு] படம்

நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.

[தொகு] அடிக்குறிப்பு

  1. பெரும்பாணாற்றுப்படை - 465
"http://ta.wikipedia.org/w/index.php?title=நாவல்_(மரம்)&oldid=1035715" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்