கொங்குத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
வட்டார வழக்குகள்
பிராமணத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கரிசல் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
தமிங்கிலம்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மதுரைத் தமிழ்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
ஜுனூன் தமிழ்

தொகு

கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி வழக்கு. இவ்வழக்கு ”காங்கி” என்ற பெயராலும் வழங்கப்பட்டது.[1] கொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால் காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது.`[2]மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அழைத்தனர்.

தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.

கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் [தொகு]

(அகரவரிசையில்)

  • அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே - அந்த இடம், அந்த இடத்திலே. (நீ அக்கட்டாலே போய் உட்காரு)
  • அந்திக்கு- இரவுக்கு
  • அங்கராக்கு - சட்டை
  • அட்டாரி, அட்டாலி - பரண்
  • அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
  • அப்பத்தா- தந்தைவழித் பாட்டி (அப்பாவின் ஆத்தாள்)
  • அப்பு - அறை. (அவளை ஓங்கி ஒரு அப்பு அப்படா, செவுனி திரும்புகிறாற்போலே)
  • அம்மாயி - அம்மாவின் அம்மா
  • ஆகாவழி- ஒன்றுக்கும் உதவாதவன்
  • ஆட்டம் - போல என்று பொருள்படும் ஒரு சொல்: (அக்காளாட்டம் சும்மா இரு - அக்காளைப் போல் சும்மா இரு)
  • ஆயா - அப்பாவின் அம்மா
  • ஆம்பாடு - காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
  • இக்கிட்டு - இடர்பாடு
  • இட்டேறி - தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
  • இண்டம் பிடித்தவன் - கஞ்சன்
  • உண்டி - (sample) = உண்ணும் பதம்? - தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
  • உப்புசம் , உக்கரம் - புழுக்கம்
  • ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
  • ஊளைமூக்கு - சளி நிரம்பிய மூக்கு
  • எச்சு - அதிகம்.
  • எகத்தாளம் - நக்கல், பரிகாசம்
  • எரவாரம்-கூரைக்கு கீழ் உள்ள இடம்
  • ஏகமாக - மிகுதியாக,பரவலாக
  • ஒட்டுக்கா - ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
  • ஒடக்கான் - ஓணான்
  • ஒப்பிட்டு, ஒப்புட்டு - போளி
  • ஒளப்பிரி - உளறு "இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்"
  • ஒறம்பற - உறவினர் (உறவின்மு்றை) - விருந்தினர்
  • ஓரியாட்டம் -சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
  • ஒருசந்தி - ஒரு வேளை மட்டும் விரதம் இருத்தல்
  • கட்டுத்தரை - மாட்டுத் தொழுவம்
  • கட்டிச்சோற்று விருந்து - கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
  • கடைகால், கடக்கால் - அடித்தளம்
  • கடகோடு - கடைசி ( கோட்டுக்கடை - கடைசிக்கடை, அந்த கோட்டிலே பாரு - அந்த கடைசியிலே பாரு)
  • கடையாணி - அச்சாணி
  • கரடு - சிறு குன்று
  • கல்யாணம் (கண்ணாலம்) - திருமணம்
  • காராட்டு காலம் - இனப்பெருக்க காலம் (காராட்டு காலத்தில் திரியும் பூனை ஒரு மாதிரி மதத்துடன் இருப்பதால் அதற்கு காராட்டுப் பூனை என்று பெயர்)
  • குக்கு - உட்கார்
  • கூம்பு - கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
  • கூதல்- குளிர், கூதகாலம்- குளிர்காலம்
  • கொரவளை \ தொண்டை -குரல்வளை
  • கொழுந்தனார்- கணவரின் தம்பி
  • கோடு - "அந்தக் கோட்டிலே உட்கார்", பழைமைச்சான்று: "கோடுயர் அடுப்பு" - "பக்கம் உயர்ந்த அடுப்பு" (புறநானூறு 164)
  • சாடை பேசுகிறான் - குறிப்பாகத் (மறைமுகமாகத்) தாக்கிப் பேசுகிறான்
  • சாங்கியம் - சடங்கு
  • சிலுவாடு - சிறு சேமிப்பு
  • சீரழி - நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
  • சீராட்டு - கோபம். (கட்டிக் கொடுத்து மூன்றுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
  • சுல்லான் (சுள்ளான்?) - கொசு
  • செகுனி, செவுனி - தாடை/கன்னம்
  • செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி
  • சோங்கு - சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
  • சேந்துதல் - தண்ணீர் இறைப்பது (கிணற்றிலே இருந்து தண்ணீர் சேந்தி வா = தண்ணீர் இறைத்துக்கொண்டு வா )
  • தாரை - பாதை
  • தொண்டுபட்டி - மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் - ஆட்டைத் தொண்டுபட்டியிலே அடை
  • துழாவு - தேடு
  • திரட்டி (திரட்டு) - பெண்ணின் முதிர்ச்சி விழா, பூப்பு நன்னீராட்டு விழா
  • நங்கை, நங்கையாள் - அண்ணி நாத்தனார்
  • நலுங்கு - உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லைச் சொல்ல மாட்டார்கள் - அவர்கள் குழந்தை நலுங்கிவிட்டதாம்)
  • நசியம் - மாடுகள் சினையாகும் பருவம்
  • நியாயம் (நாயம்) - பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் - அவன் நியாயம் யாருக்கு வேணும், அங்கே என்னடா பேச்சு - அங்கே என்னடா நாயம் )
  • நீசதண்ணி- பழையசோற்றுத்தண்ணி
  • நோக்காடு - நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
  • நோன்பு (நோம்பி) - திருவிழா
  • பகவதியாயி நோன்பு (பவுதியாயி நோம்பி) - பகவதி அம்மன் திருவிழா
  • படு - குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
  • பழமை - பேச்சு ( அங்கே என்ன பேச்சு - அங்கே என்ன பழமை )
  • பாலி - குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
  • பிரி - பெருகு, கொழு ("பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்")
  • வட்டல் -தட்டு
  • புண்ணியாசனை - (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
  • பெருக்கான் - பெருச்சாளி
  • பொக்கென்று - வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
  • பொட்டாட்டம் - அமைதியாக
  • பொடக்காலி - புழக்கடை
  • பொடனி, பொடனை - (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
  • பொழுதோட- மாலைநேரம்
  • பொறந்தவன் - உடன் பிறந்த சகோதரர்
  • பொறந்தவள் - உடன் பிறந்த சகோதரரி
  • மச்சாண்டார் - கணவனின் அண்ணன்
  • கொழுந்தியாள் - கணவனின் தங்கை
  • மலங்காடு - மலைக்காடு
  • மசையன் - விவரமற்றவன்
  • மழைக்காயிதம் - பாலிதீன் காகிதம்
  • மளார் - விரைவாக, சீக்கிரம் (மளார் என்று தனியாக சொல்லமாட்டார்கள். மளாரென்று வா\போ, மளாரென்று வேலையை முடி என்று அடுத்த சொல்லோடு இணைந்து தான் இச்சொல் வரும்)
  • முக்கு - முனை, முச்சூடும்- முழுவதும்,. மூலை, வளைவு
  • வெகு - அதிக
  • வேளாண்மை (வெள்ளாமை) - உழவு, விவசாயம்
  • வேசகாலம்- வெய்யில்காலம்
  • வேகு வேகுன்னு- அவசரஅவசரமாய்
  • சீக்கு - நோய்
  • பன்னாடி - கணவன், முதலாளி (பண்ணைக்கு சொந்தக்காரன்)
  • முட்டுவழி - முதலீடு
  • கொழு -ஏர்மனை
  • கொடாப்பு ‍- கோழிகளை அடைத்து வைக்கப் பயன்படும் பெரிய கூடை (தென் மாநிலங்களில் பஞ்சாரம் என்று சொல்லப்படும்)
  • ரக்கிரி -கீரை
  • Ukkoru - Utkaar

மேற்கோள்கள் [தொகு]

  1. http://books.google.co.in/books?id=e7c9AAAAMAAJ&q=kangiam+mysore&dq=kangiam+mysore&hl=en&ei=fDWtTeXUIYu8vQP8oejTCg&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ
  2. "மைசூரின் தெற்கு பகுதியில், தமிழ் மொழியை கங்க எனவும், அம்மக்களை கங்கய மக்கள் எனவும் அழைத்தனர் - ஆங்கிலத்தில்". Cf. Wilks: Mysore 1, 4n. 55.[1]
"http://ta.wikipedia.org/w/index.php?title=கொங்குத்_தமிழ்&oldid=1346651" இருந்து மீள்விக்கப்பட்டது