ஆல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆல் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆலமரம்
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இனங்கள் | ||||||||||||||
|
பல |
ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
பொருளடக்கம் |
பெயர் [தொகு]
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[2]
பயன் [தொகு]
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
- நல்ல நிழல் தரும். [3]
- இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
- ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
- பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
- yedu nala karthu tarum
சிறப்பு [தொகு]
- சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
- திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
- 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' என வாழ்த்துவர்.
படத்தொகுப்பு [தொகு]
அடிக்குறிப்பு [தொகு]
- ↑
- அகல் > ஆல்
- பகு < பகல் > பால்
- துகள் > தூள்
- விழுது > வீழ்
- ↑
- மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
- ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
- ↑
- தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
- தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
- நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
- அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
- மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை
- ↑ ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81