மங்குசுத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Purple Mangosteen
Illustration from "Fleurs, Fruits et Feuillages Choisis de l'Ile de Java" 1863-1864 by Berthe Hoola van Nooten (Pieter De Pannemaeker lithographer)
Illustration from "Fleurs, Fruits et Feuillages Choisis de l'Ile de Java" 1863-1864 by Berthe Hoola van Nooten (Pieter De Pannemaeker lithographer)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) இருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Malpighiales
குடும்பம்: Clusiaceae
பேரினம்: Garcinia
இனம்: G. mangostana
இருசொற்பெயர்
Garcinia mangostana
L.

மங்குசுத்தான் அல்லது மங்குஸ்தீன்- மலேசியத் தமிழ் (தாவரவியல் பெயர்:Garcinia mangostana, ஆங்கிலம்:mangosteen), வெப்பவலயத்துக்குரிய என்றும் பசுமையான தாவரம் ஆகும். இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 ft) உயரனானது. மங்குசுத்தான் பழம் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும் இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. இது உண்ணப்படுவதில்லை. [1] பழத்தின் உள்ளாக இருவித்திலை வித்து காணப்படும்[2]

பொருளடக்கம்

[தொகு] இலங்கையில் மங்குசுத்தான்

இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா, கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டி மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது.

[தொகு] சுற்றுக்கனியமும் உண்ணப்படும் உள்ளோட்டுச் சதயமும்

கருக்கட்டப்படாத பூவிலிருந்தே காயுருவாகும். காய் இளம் பச்சை நிறமாகக் காணப்படும். மரத்தின் அங்குரத்தின் கீழ் காணப்பட்டால் வெள்ளை நிறத்தில் இருக்கும். அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களில் சுற்றுக்கனியம் கடும்கபில நிறத்துக்கு மாறும். உள்ளோட்டுச் சதயம் உண்ணப்படும் பகுதியாகத் திரிபடையும். 6-8 சதம மீட்டர் விட்ட அளவு கொண்டதாக பழம் மாறும் பருவம் பழுப்பதற்குத் தயாராகும் பருவமாகும்.

[தொகு] போசணை மற்றும் வேதியியல் கூறுகள்

மங்குசுத்தான்,
பிரித்தெடுக்கப்பட்ட சாற்றுப் பொதி
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 70 kcal   310 kJ
மாப்பொருள்     18 g
- உணவு நார்ப்பொருள்  1.8 g  
கொழுப்பு 0.6 g
புரதம் 0.4 g
நீர் 81 g
கால்சியம்  10 mg 1%
இரும்பு  0.2 mg 2%
பாசுபரசு  20 mg 3%
Percentages are relative to US
recommendations for adults.
Source: USDA Nutrient database

மங்குசுத்தானில் உண்ணப்படும் பகுதியான உள்ளோட்டுச்சதயம் பிரதான போசனைக் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை.[3]

Mangosteen tree

[தொகு] மேற்கொள்கள்

  1. "Mangosteen: Sweet, Tangy, Delicious". Exotic Fruit For Health (26 August 2011). பார்த்த நாள் 22 October 2011.
  2. Mabberley, D.J. 1997. The plant book: A portable dictionary of the vascular plants. Cambridge University Press, Cambridge.
  3. Mangosteen nutrient information
"http://ta.wikipedia.org/w/index.php?title=மங்குசுத்தான்&oldid=1090931" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்