மல்கோவா மாம்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்கோவா மாம்பழம்

.

மல்கோவா மாம்பழம் (Mulgoba) என்பது தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் முதன்மையாக பயிரிடப்படும் மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். வியாபார ரீதியாக பயிரிடப்படும் இரகங்களில் ஒன்று ஆகும். இந்த இரகம் இயற்கையிலேயே பூக்கள் குறைவு இதனால் குறைவாகவே விளைச்சல் தரக்கூடியது ஆகும். இதன் பழங்கள் பெரியவை. நல்ல மணம் உள்ளவை. பழங்கள் தரம் மிக உயர்வானது. இந்த பழம் இனிப்பாக சாறும், மஞ்சல் நிறச் சதைப்பற்றுடன், நல்ல இருப்புத் தன்மை உடையதாகவும், கெட்டியான தோல் கொண்டதாக உள்ளதால் நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளபழம் ஆகும்.[1]

மேற்கோள்[தொகு]

  1. ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர்,கிருட்டிணகிரி, ஏற்றுமதிக்கேற்ற மா ரகங்கள். கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கோவா_மாம்பழம்&oldid=2040086" இலிருந்து மீள்விக்கப்பட்டது