முள்ளு சீதா
| முள்ளு சீதா | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||
|
||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||
| Annona muricata |
||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||
|
முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமைமாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும். மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா: கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமாகும். இதன் பழங்கள் செம்புற்றுப்பழம்(strawberry) மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது.
.
மருத்துவம்[தொகு]
இதன் பட்டை, இலை, பழம் எல்லாவற்றையும் நோய்களை குணமாக்க பயன்படுத்துகின்றனர். பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும் குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். மற்ற நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. புற்றுநோய்க்கு மருந்தாக இப்பழம் பயன்படுத்தப்படுகிறது[1]